த்ரில் காதல் கதையை கூறும் ‘நொடிகள்’

மனதை மயக்கக் கூடிய ஒரு பூங்காவில் தன் மனத்திற்கினிய காதலியுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான், இளைஞன் ஒருவன். ஆனால், அந்த உரையாடல் என்னவோ மகிழ்ச்சி தரும்வகையில் இல்லை. அவள் ஒரு பக்கத்தில் கண்ணீர் வடிக்க, அவனோ தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறான், அவளின் பதிலை எதிர்பார்த்து. ஆனால், அவளிடம் மெளனம் மட்டுமே பதிலாக வருகிறது. என்ன நேர்ந்தது இவர்களுக்குள்? என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது, ‘நிமிடங்கள்’ குறுந்திரைப்படம். காதல் என்ற சொல் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பில்லாத அன்பையும், அதனால் ஏற்படும் வலியையும் பறைசாற்றும் இந்த…

‘வெள்ளைப் பூவே’ காணொளிப்பாடல்

ADK SRIRASCOL, TEEJAY ஆகியோரின் கூட்டு முயற்சியில் வெளியாகியிருக்கிறது, ‘வெள்ளைப் பூவே’ காணொளிப்பாடல். பாடலின் மிகப்பெரிய பலம், ரப் இசை. ஆரம்பத்தில் மென்மையாக பயணிக்கும் பாடல் இதனாலேயே வேகமெடுக்கிறது. பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து ரசிக்கவைக்கிறது. அலட்டல் இல்லாத காட்சியமைப்பு, பின்னணி இசை, பாடகர்கள் என அனைத்தும் நிறைவாகவே உள்ளது. அனைவரும் தங்கள் பங்களிப்பை நிறைவாகவே தந்துள்ளார்கள். காதல் ரசம் சொட்டும் வரிகள் இனிமை. ஆனால், அந்த இனிமையை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளமுடியாதபடி உச்சரிப்புப் பிழை தடுத்துவிடுகிறது. இதை…