கே.ஜே.யின் ‘பஜாரிப்பெட்டை’ விரைவில்

கே.ஜே.யின் இயக்கத்தில் ‘பஜாரிப்பெட்டை’ உருவாகி வருகிறது. நடிப்பு – குகனி டீகே, மிதுனா, அரவிந்தன், சித்தார, துவா , சிந்து, சசிகரன் யோ மற்றும் பலர். ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியம். படத்தொகுப்பு – சசிகரன் யோ. இசை, பாடியவர் – மொஹமட் சமில் ஜீ . வரிகள் – தனு தனுசன். இசை மற்றும் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட ஒளித்தொகுப்பு வேலைகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெகுவிரைவிலேயே ‘பஜாரிப்பெட்டை’யை நீங்கள் ரசிக்கலாம். கலைஞர்களின் இம் முயற்சி வெற்றியடைய…

உறவுகளை தேடும் ‘எங்கே?’ காணொளிப்பாடல்

ஈழத்தில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு சமர்ப்பணமாக வெளியாகியுள்ளது, ‘எங்கே?’ காணொளிப்பாடல். பேரினவாதத்தின் போர் அனைத்தையும் பறிகொண்டு விட்டபோதும், தொடர்ந்தும் பழிவாங்கப்படுகிறது நம் தமிழ் இனம். இப்போது அவர்களின் மிக முக்கிய கோரிக்கை, காணாமல் போன தம் உறவுகளை மீட்டுத் தாருங்கள் என்பது தான். குறைந்தபட்சம், அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா என்பதையெனும் அறியத்தாருங்கள் என கோருகிறார்கள். கடந்து விட்ட இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ கதவுகளை தட்டியாகிவிட்டது. பலர், கால்களிலும் விழுந்தாகிவிட்டது. உண்ணும் உணவைத்…

நாளையதினம் ‘கோடாலி’ டீஸர்

‘கோடாலி’ குறுந்திரைப்படத்தின் டீஸர் நாளையதினம் வெளியாகவுள்ளது.

நாளை காலை 7 மணியளவில் LBM brother s பேஸ்புக் பக்கத்தில் இந்த டீஸர் வெளியாகும் என இயக்குநர் கதிர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கலைஞர்களின் இந்த முயற்சி வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்.