அவுஸ்திரேலியாவில் ஒரு குயிலும் 2 கோட்டான்களும்

காதல், நகைச்சுவைப் படமாக உருவாகவிருக்கும் ஒரு குயிலும் 2 கோட்டான்களும் (Ok2K) திரைப்படத்தின் படப்புக்கள் இன்று ஆரம்பமானது.

சந்திரா தயாரிப்பில் தனபாலசுந்தரம் திரைப்படத்தை இயக்குகிறார்.

முன்னதாக, கடந்த 24 ஆம் திகதி காலை 10 :30 மணியளவில் சிட்னி முருகன் கோவிலில் படத்தின் பூஜை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ok2K குழுவினருக்கு தமிழிதழின் வாழ்த்துக்கள்.

 

பிரான்ஸ் இசைக்குழுவுடன் நம்கலைஞர்கள் இணைந்து தரும் ‘UDALUM’

பிரான்ஸ் நாட்டு இசைக்குழுவுடன் கைகோர்த்து நம் தமிழ் கலைஞர்கள் முதல்முறையாக உருவாக்கியிருக்கும் காணொளிப்பாடல், ‘UDALUM’ எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று உத்தியோகப்பூர்வமாக வெளியாகவுள்ள இந்த புதிய படைப்புக்கு அனைவரது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டிநிற்கிறார்கள், நம் கலைஞர்கள். அவர்களின் இந்த முயற்சி வெற்றிபெற தமிழிதழின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.   Cast & Sung : Aravinth Vijayakumar . Msiieuu Kaajay . Livi ThiYadöør Slk . Piradeep Chiva . Asewine Ase . Vinoj Slk . Ruku Guna . Kabilan Ty Kabs Thirukumar . Ahashe Amz . Apy KS . Nicolas Bailleul Music : Livi Music Livi ThiYadöør…

எச்சரிக்கை மணியடிக்கும் ‘கைப்பேசி’

 

Kisho Loveஇன் இயக்கம் மற்றும் Trible Beats இசையில் வெளியாகியிருக்கும் ஒரு நிமிட குறுந்திரைப்படம் ‘கைப்பேசி’.

பெரிதான காட்சிகள் இல்லை; வசனங்கள் இல்லை. அதற்கு பதிலாக நகைச்சுவை பாணியில் அமைந்த இசையின் மூலம் அவசரமும் அவசியமுமான கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள், கலைஞர்கள்.

‍மொத்தத்தில் ‘கைப்பேசி’, இளைய தலைமுறைக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.

 

‘Kaathal Na?’ குறுந்திரைப்படத்தின் டீஸர் வெளியானது!

வெகுவிரைவில் வெளியாகவிருக்கும் Narvini Deryயின் ‘Kaathal Na?’ குறுந்திரைப்படத்தின் உத்தியோகப்பூர்வ டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

ஒளிப்பதிவு: Surenth puvanararajah
செம்மையாக்கம்: Thilag Jeyaratnam
இசை: Vashanth Sellathurai
நடிப்பு: Printhas & Narvini Dery

கலைஞர்களின் இப்புதிய முயற்சி வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்.

அஜந்தனின் இயக்கத்தில் ‘ஏணை

அஜந்தனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகவுள்ள புதிய படைப்பு, ‘ஏணை’.

ஒளிப்பதிவு – Govi sun. செம்மையாக்கம் – Shankar. இசை – Anistan

கலைஞர்களின் இந்த புதிய முயற்சி வெற்றிபெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.