இசைப்பிரியனின் அம்மா பாடல் & விமல்ராஜின் பூம்புகார் மற்றும் குருதிப்பூக்கள் குறும்படங்கள் வெளியீடு. Written by Tamilithal

நல்லூரான் கலைத்தாய் மன்றத்தின் ஏற்பாட்டில் தீபம் தொலைக்காட்சி, உதயன் வானொலி மற்றும் தமிழிதழ்.கொம் ஊடக ஆதரவில்  இசைப்பிரியனின் அம்மா பாடல் ஒன்றும் விமல்ராஜின் இயக்கத்தில் உருவான இரு குறும்படங்களான  பூம்புகார் மற்றும் குருதிப்பூக்களும் 30.03.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில்  நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள TCT மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. இவ் விழாவிலே கலந்துகொண்டு எமது படைப்பாளிகளுக்கான ஆதரவை வழங்குமாறு ஏற்ப்பாட்டளர்கள் கேட்டுகொள்கின்றார்கள்.

பிரமாண்டமாக மார்ச் 29 அன்று லண்டனில் “உலக தமிழ் குறும்பட விழா 2014.”

எதிர் வரும் மார்ச் 29 அன்று லண்டனின் வெற்றி வானொலி, வணக்கம் லண்டன், Cloud மீடியா இணைந்து மிக பிரமாண்டமாக LEBARA பெருமையுடன் வழங்கும் மற்றும் Abi Fast Food & ABARNA Beauty Care இணைந்து வழங்கும் உலக தமிழ் குறும்பட விழா 2014 நடை பெறவிருக்கிறது. சிறந்த படைப்பாளிகளுக்கு கலை அங்கிகாரம் கொடுத்து உலக பார்வைக்கு அவர்களின் படைப்புகளை விதைத்து மகுடம் சூட்டும் விதமாக பிரமாண்டமாக இக் குறும்பட விழா இடம் பெறவிருக்கிறது. ஒவ்வொரு கலைஞனும் தங்களது படைப்புகளை செதுக்கி…

டென்மார்க்””கேர்னிங் பயோ சிற்றி” திரையரங்கில் செங்கம்பள வரவேற்போடு உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் முதற்காட்சிகள் வெளியானது.

தமிழிதழ் இணையத்தளத்தின் ஊடக ஆதரவில் டென்மார்க்””கேர்னிங் பயோ சிற்றி” திரையரங்கில் செங்கம்பள வரவேற்போடு உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் முதற்காட்சிகள் வெளியானது.

டென்மார்க் கலைஞர்கள், தொழிலதிபர்கள், ஐரோப்பிய கலைஞர்கள், ஊடகங்கள் மற்றும் மக்கள் கூட்டமென இரண்டு திரைகள் நிறைந்த காட்சிகளோடு மிகப்பிரமாட்டமாக வெளியானது.

இத்திரைப்படத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தவர்களிடம் பதியப்பட்ட வீடியோ பதிவுகளின் ஒரு பகுதி இன்றைய உங்கள் பார்வைக்காக.

தொகுப்பு : என் என் கஜீ
ஒளிப்பதிவு மற்றும் எடிற்றிங் : ஜீவன்

 

டென்மார்க் “கேர்னிங் பயோ சிற்றி” திரையரங்கில் “உயிர்வரை இனித்தாய்” பிரமாண்ட வெளியீடு

பிரத்தியேகமாக தமிழிதழ் ஊடகத்தின் நேரடி பங்களிப்பில், டென்மார்க் கலைஞர்கள், ஐரோப்பிய கலைஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தமிழிதழ் குழுவினர்கள் இணைந்து உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் தொடக்க நிகழ்வுகளை டென்மார்க்””கேர்னிங் பயோ சிற்றி” திரையரங்கில் சிறப்பித்திருந்தனர். TUBETAMIL பெருமையுடன் வழங்கும், கிரியேட்டிவ் சிட்டி ஆர்ட்ஸ் & பாவல் ( தமிழ்நாடு ) அவர்கள் தயாரிப்பில் கே.எஸ்.துரை ( டென்மார்க் ) அவர்கள் இயக்கியுள்ளார், பிரபல கலைஞன் வசந்த் செல்லத்துரை, நர்வினிதேரி ரவிஷங்கர் மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் இரண்டு…

GTAA & தமிழிதழ் பெருமையுடன் வழங்கும் சாதனைத்தமிழா 2013 காணொளியின் முன்னோட்டம்

யூன் மாதம் 20 ம் திகதி(20.06.2014) நடைபெறவுள்ள , சாதனைத் தமிழா 2013 விருது வழங்கும் விழாவின் அறிமுக நிகழ்வும், பத்திரிகையாளர் சந்திப்பும் 19.03.2014 , புதன் கிழமை வெம்பிலி பகுதியில் நடைபெற்றது. ஊடகத்துறை நண்பர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கலையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வில் சாதனைத் தமிழா விருதுகள் பற்றிய விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு, சாதனைத் தமிழாவின் உத்தியோகபூர்வ இணயத்தளம், சாதனைத் தமிழா விருதின் மாதிரி வெளிவடிவம், சாதனைத் தமிழா விருதின்…

தமிழிதழின் நேரடி பங்களிப்பில் நாளை டென்மார்க் திரையரங்கில் “உயிர்வரை இனித்தாய்” திரைப்படம் பிரமாண்ட வெளியீடு..!

பிரத்தியேகமாக தமிழிதழ் ஊடகத்தின் நேரடி பங்களிப்பில், டென்மார்க் கலைஞர்கள், ஐரோப்பிய கலைஞர்கள் மற்றும் தமிழிதழ் குழுவினர்கள் இணைந்து திரைப்படத்தின் தொடக்க நிகழ்வுகளை டென்மார்க்””கேர்னிங் பயோ சிற்றி” திரையரங்கில் சிறப்பிக்கவுள்ளார்கள். நீண்ட கால முயற்சியில், டென்மார்க் கலைஞர்கள் ஒன்றிணைந்து இத்திரைப்படத்திற்க்காக உழைத்திருக்கிறார்கள், சில மாதங்களுக்கு முன் படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்து மிக வரவேற்பை பெற்றது யாவரும் அறிந்ததே, நகைச்சுவை, பாடல், நடனம், காதல் என்று கமெர்சியல் களத்துடன் களமிறங்கும் “உயிர் வரை” இனித்தாய் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வயிட அலைமோதும்…

பிரான்சில் 28 மார்ச் அன்று ஓவியர் வாசுகன் அவர்களின் “ஓவிய கண்காட்சி”, சிறப்பு அழைப்பிதழ்..!

கலை என்கின்ற ஒற்றை சொல்லில் எம்மவர்கள் விதைத்து வரும் படைப்புகளில் பெரிதாக பேசப்படாத, முக்கியமாக பேச படவேண்டிய, பாரட்டபட வேண்டிய ஒரு அற்புத கலைதான் ஓவியம். மொழி, இனம், கலாச்சாரம், என்று எல்லைகள் கடந்து அனைத்து தரப்பினரையும் உணர்வு பூர்வமாக, சிந்திக்க வைக்கும் கண்கவரும் ஓர் நுற்பமான கலை தான் ஓவியம், அப்டிபட்ட ஓர் கலையை நாடு கடந்து ஐரோப்பா மண்ணில் சாதனை படைக்க துடிக்கும் புகழ் பெற்று வரும் இளம் கலைஞன் ஓவியர் வாசுகன் அவர்கள்.…

“முதல் மழை” குறும்படம் ஆண் பெண் நட்பின் உறவில் காதல் மழை..!

நட்பின் உறவையும் தாண்டி காதல் உணர்வை சித்தரித்து முதல் மழையின் இனிய துளிகளாக இக்குறும்படம் மனதை நனைத்து விடுகிறது..! Concept and Direction: HARSHATH KHAN CAST Bijesh Derina Camera and Editing: Dev Kalidhasan Assistant Director: VICKY நல்ல நண்பர்களாக வாழும் பிதேஷ், ஹரினா வின் வாழ்கையில் காதல் என்கின்ற இனம் புரியா காதல் அலை அடிக்க தொடங்கிகிறது, நட்பையும் தாண்டி ஓர் உணவு ஹரினா வை வாட்டுகிறது, அது காதலின் உச்சம்…

பிரித்தானியாவில் A Gun & A Ring திரையிடல்

  ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் (A Gun & a Ring), 2013 ஆம் ஆண்டு கனடாவில் தயாராகி, வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இது சூன் 19, 2013 அன்று சீனாவின் சாங்காய் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில், போட்டிக்காகத் திரையிடப்பட்ட முதலாவது தமிழ்த் திரைப்படமாகும். 112 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்தும் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களில் 12 படங்கள் மட்டுமே போட்டிக்குத் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. இத்திரைப்படத்தை 1999 என்னும் திரைப்படத்தை…

“தமிழ் காத்து – 2014” ஈழத்தமிழ் கலைஞர்களின் படைப்புக்களின் பிரசவகளம்

தமிழிதழ் இணைய ஆதரவில் சுவிஸ் – பாசெல் மாநகரில் “TRX தமிழ் காற்று” வானொலியின் ஆறாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஐரோப்பா வாழ் ஈழத்து கலைஞர்களை ஒன்றிணைத்து 02.03.2014 அன்று மாபெரும் நிகழ்வாக நடைபெறவுள்ளது TRX இன் “தமிழ் காத்து – 2014” நிகழ்வு. வருடாவருடம் நடைபெறும் இந்நிகழ்வானது இவ்வருடம் மிகச்சிறப்பாக நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் ஈழத்தமிழ் கலைஞர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பல்வேறு கலை இலக்கிய மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக…. –…