தமிழக, ஈழத்து கலைஞர்களின் கூட்டுத்தயாரிப்பில் “உயிர்வரை இனித்தாய்”திரைப்படம்

தமிழகக்கலைஞர்கள் மற்றும் டென்மார்க்கைச்சேர்ந்த ஈழத்து கலைஞர்களின் கூட்டுத்தயாரிப்பில் “உயிர்வரை இனித்தாய்” முழுநீளத் திரைப்படம் தயாராகிவருகிறது. உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் காதல், காமடி கலந்த புத்தம் புதுப்படைப்பாக வெளிவரவிருக்கும் “உயிர்வரை இனித்தாய்” திரைப்படம் தமிழகத்தைச் சேர்ந்த பாவல் அவர்களின் தயாரிப்பில் டென்மார்க்கைச்சேர்ந்த மூத்தகலைஞர் கே.எஸ்.துரை அவர்களின் இயக்கத்தில், தென்னிந்திய திரைப்படம் மற்றும் பாடல்கள் மூலமாக பிரபல்யமான ஈழத்து கலைஞன் வசந்த் செல்லத்துரை, நர்வினிதேரி  ரவிஷங்கர் மற்றும் பலரின் நடிப்பிலும், அவதாரம் குழுமத்தின் டேசுபன் அவர்களின் பிரதான ஒளிபதிவிலும் சுரேந்த் புவனராஜா மற்றும் அஜிந்த் ஆகியோரின் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவிலும், வசந்த் செல்லத்துரை அவர்களின் இசை மற்றும் படத்தொகுப்பிலும் வெளிவரவிருக்கிறது.  …

தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும் ஐரோப்பா (இலண்டன்) வாழ் ஈழத்தின் கதாநாயகன் ஜே ஜே.

தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும் ஐரோப்பா (இலண்டன்) வாழ் ஈழத்தின் கதாநாயகன் ஜே ஜே. பல வெற்றி இயக்குனர்களின் திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பல விளம்பரங்கள், தொடர் நாடகங்களிலும் பணிபுரிந்த இயக்குனர் G. R. ஹேமஜெயந்தரனின் “வன விலங்கு” திரைப்படதின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் கதாநாயகனாக  ஜே ஜே  அறிமுகமாகிறார். கடந்த  ஆண்டு ஈழத்து கலைஞர்கள் பலர் தமது திறமையினை தென்னிந்திய சினிமாவில் நிரூபித்துக்காட்டியுள்ளனர். அந்த வரிசையில் இவ் வருடம்  ஜே ஜே(Jay Jey) அவர்களின்  திறமைக்கு  கிடைத்த அங்கீகாரமே இந்த முழுநீள…

“TRX தமிழ்காற்று” 5வது அகவை நிறைவு

சுவிட்சர்லாந்து பாசல் மாநகரில் இருந்து திங்கட்கிழமைகளில் காற்றலை வழியாக FM 93.6 மற்றும் 94.5 வழியாகவும்,  www.trxfm.com என்னும் இணையத்தளம் வழியாகவும் ஒலிபரப்பாகி வருக்கிறது “TRX தமிழ்காற்று” 07.01.2008 அன்று பாசல் வானலையில் “தமிழ்காற்று” என்ற மகுட வாசகத்துடன் தனது கன்னி ஒலிபரப்பை மேற்கொண்ட “TRX தமிழ்காற்று வானொலி சேவை” 07.01.2013 அன்று தனது 5வது அகவையை நிறைவு காண்கின்றது.   இந்த வேளையில் தம்மோடு வழிப்பயணத்தில் வழிகாட்டிகளாக இருந்தோர். உடன் பயணித்தோர், விழ முயன்றவேளையில் தக்க சமயத்தில் தாங்கி…

சுவிஸ் ஜெர்மன் கலைஞர்களின் ஒன்றிணைவில் ”பொறாமை” குறும்படம்

தமிழிதழ் ஊடக ஆதரவில் KD Prod in Association மற்றும் ”அன்றும் இன்றும்” குழுமம் இணைந்து தயாரித்து, விஜய் ஜான் மற்றும் கார்த்திக் தீப் இன் திரைக்கதை இயக்கத்தில் வெளிவரவிருக்கும் குறும்படம்  ”பொறாமை” சுவிஸ் மற்றும் ஜெர்மன் கலைஞர்களின் ஒன்றிணைவில் உருவாக்கப்பட்டுவரும் ”பொறாமை” குறும்படம்,  சீன் ஜான்சன், Nஹீரோ, லாபி, விஜய் ஜான், மற்றும் கார்த்திக் தீப் நடிப்பிலும், கார்த்திக் தீப் இன் ஒளிப்பதிவு மற்றும் ஒளிக்கலவையிலும் தயாராகிவருகிறது. Short Movie Titel : Poramai Cast : Sean Johnson | NHero | Labi | Vijai John |…

ஈழத்துக்-கலைஞன்-அஜய்-பாடலாசிரியராகும்-facebook-காதல்

 

ஈழத்துக் கலைஞன் ”இளம் புதுமைக்கவி” அஜய் பாடலாசிரியராக அறிமுகமாகும் திரைப்படம் “Facebook காதல்”

 

 

இந்த வருடம் அதிகமான ஈழத்துகலைஞர்கள் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ”இளம் புதுமைக்கவி” அஜய். இவருடைய விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியே இந்த வாய்ப்பு.

 

கலைத்துறையில் மென்மேலும் வளர ”இளம் புதுமைக்கவி” அஜய் அவர்களுக்கு தமிழிதழ் இணையம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

‘எம்முயிர் தமிழே” இசைத்தொகுப்பு- விளம்பர பாடல்

தமிழ் இளையோர் அமைப்பு – இங்கிலாந்து (TYO UK) பெருமையுடன் வழங்கும் ”எம்முயிர் தமிழே”  இசைத்தொகுப்பு வெளியீடு செப்டம்பர் 1 ம் திகதி 2012 அன்று நடைபெறவுள்ளது. புலவர் சிவநாதன் வரிகளுக்கு ஜூட் ஜெயராஜ் இசையில் ஜாக்சன் போஸ்கோவின் குரலில் ”எம்முயிர் தமிழே”  இசைத்தொகுப்பு வெளிவரவிருக்கிறது.  அதற்கான விளம்பர பாடல் வெளியாகியுள்ளது.    ”எம்முயிர் தமிழே”  இசைத்தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் தமிழ் இளையோர் அமைப்பினர். https://www.facebook.com/tyouk.media நன்றி: கே.ரஜெந்தன் TYO UK proudly presents EMMUYIR THAMILE! Emmuyir Thamizhey Promo OUT NOW – Song to be released on 1st…

ஏய் புள்ள – முன்னோட்டம் – EY PULLA (OFFICIAL TRAILER) – SSR

ஏய் புள்ள – முன்னோட்டம் வெளியாகியுள்ளது. விரைவில் முழுமையான காணொளி பாடல் .   SOUTH SIDE RECORDS in association with iTAMIL CREATION EY PULLA LYRICS: RUPESH SINGING: LUKSHANI AND RUPESH BEAT BOXER: NELUKSHAN (NELLY) CINEMATOGRAPHY, EDITING: KAJEE KJ DANCERS: PRABHU RAJ, SKJ KARAN, SANTHOSH VIDEO SONG COMING SOON 🙂 LIKE OUR FACEBOOK PAGE AND SUPPORT US http://www.facebook.com/SouthSideRecordz http://www.facebook.com/ssr.lukshani…

“பதில்” முழு நீள திரைப்பட பாடல் வெளியீட்டு விழா – பாரிஸ்

பான்ஸ் வீடியோ” (Fans Video) தயாரிப்பில் பாரிஸ் திரைத்துறை கலைஞர்கள் இணைந்து வழங்கும் த.சுதர்சன் அவர்களின் இயக்கத்தில் “பதில்” முழு நீள திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய இசை தட்டு வெளியீட்டு விழா பாரிஸ் விநாயகர் ஆலயத்தில் 17/08/2012 அன்று சிறப்பாக நடைபெற்றது.

 “பதில்” முழு நீள திரைப்பட குழுவுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

திலீப் வர்மன் ”விழிகள் சேருமா?” விரைவில் தமிழிதழில்…

Acoustical Recordz வழங்கும் ”விழிகள் சேருமா?” (Vizhigal Seruma ?- Missing something in you…) பாடல் வெளிவரவிருக்கிறது. மலேசிய இசையமைப்பாளர் “ஒரு காதல் கதை” தீபன்(Tiban) இசையில் ”இளங்கவித் தென்றல்” சானியா மற்றும் புதுமுக பாடலாசிரியர் ஜெனிதா.R ஆகியோரின் கவி வரிகளில் பிரபல மலேசிய பாடகர் திலீப் வர்மன் இன் குரலில் வெளிவரவிருக்கிறது ”விழிகள் சேருமா?” பாடல்.
“AS Digital Dreams” அகிலன் சிவானந்தம் ஆதரவிலும் உங்கள் அபிமான தமிழிதழ் (Tamilithal.com) இணைய ஆதரவிலும் ”விழிகள் சேருமா?” பாடலை மிக விரைவில் தமிழிதழ் இணையத்தின் வாயிலாக கேட்டு மகிழலாம்.
”விழிகள் சேருமா?” பாடல் குழுவுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

”முதல் பார்வை” குறும்பட முன்னோட்டம்

DREAM MEDIA WORKS தயாரிப்பில் ”முதல் பார்வை” குறும்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. அருண் கிரிஷ்ணராஜா வின் இயக்கத்திலும் நடிப்பிலும் தயாராகிவரும் இக்குறும்படத்தின் முன்னோட்ட காட்சி வெளிவந்துள்ளது.   அருண், கீர்த்தனா, நிவேதா, சரண்ஜா, அருண்பிரசாத், பிரசாத், நிவேதன் ஆகியோரின் நடிப்பிலும், அருண் கிரிஷ்ணராஜா வின் இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புடன், அருண்பிரசாத் மற்றும் பிரசாத் ன் ஒளிப்பதிவிலும் Javed Reax ன் இசையிலும் மனங்கவரும் காதல் காவியமாக தயாராகிவருகிறது ”முதல் பார்வை” குறும்படம். எம்மவர் படைப்புகளை உலகமெங்கும் பரப்பிவரும் DREAM MEDIA WORKS ன் சொந்த தயாரிப்பான இந்த ”முதல் பார்வை” குறும்படம்…

Question Time பகுதியில் தமிழ் மொழியின் பெருமை

இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகை ஒன்றில் Question Time பகுதியில் கேட்கப்பட்ட கேள்வியோன்ரின் மூலமாக எமது தாய்மொழியான தமிழ் மொழியின் பெருமையும் தொன்மையும் வெளிக்கொணரப்பட்டுள்ளது. தமிழர்களாகிய நாம் தமிழையும் தமிழின் பெருமைகளையும் மறந்தாலும் சகோதர மொழியினர் தமிழை பெருமையாகவே எண்ணுகின்றார்கள். இதற்கு ஒரு சான்றுதான் இந்த தகவல். இது ஒரு சிறிய சான்றுதான் இதைவிட பல பெரிய சான்றுகள் உள்ளன. அவ்வாறான சான்றுகளை சிலர் திட்டமிட்டு அளித்து வருவதும் குறிப்பிடப்படத்தக்கது, எமது மொழியை தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் தமிழை மறக்காமலும் எமது…

ராஜ்பவனின் ”அன்று ஒரு நாள் அவளுடன்” விரைவில்

இளம் கலைஞன் ராஜ்பவனின் ”அன்று ஒரு நாள் அவளுடன்” காணொளி பாடல் விரைவில் வெளிவரவிருக்கிறது.
வெர்னன் ஜி சேகரம் இசையில் ராஜ்பவனின் குரலில் பல பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமானவை. அந்த வரிசையில் இந்த ”அன்று ஒரு நாள் அவளுடன்” பாடலும் இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
 ”அன்று ஒரு நாள் அவளுடன்” பாடல் குழுவுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி: http://www.ilayavalam.com/