வெள்ளியன்று ‘பஜாரிப்பேட்டை’ முன்னோட்டம்

‘பஜாரிப்பேட்டை’ காணொளிப்பாடலின் முன்னோட்டம், எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று (நாளை மறுநாள்) உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

அன்றையதினம் மாலை 5 மணிக்கு முன்னோட்டம் வெளியிடப்படும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள இயக்குநர் Kay Jay, ரசிகர்களின் ஆதரவை வேண்டிநிற்கிறார்.

விரைவில் ‘Secret Gun’

Mitchell R. Chantheran Esther Vanaja Paas இயக்கத்தில் வெகுவிரைவில் வெளிவரவிருக்கும் கலை படைப்பு, ‘Secret Gun’.

இதில் Mitchell R. Chantheran Esther Vanaja Paas ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

சுதர்சன்ரட்ணம் இயக்கத்தில் ‘சாலைப்பூக்கள்’

சுதர்சன்ரட்ணம் இயக்கத்தில் நிர்மலின் இசையில் தயாராகிவருகிறது, ‘சாலைப்பூக்கள்’ முழுநீளத் திரைப்படம்.

ஒளிப்பதிவு – வின்சன் குரு, படத்தொகுப்பு – இசைப்பிரியன், பாடல்வரிகள் – செல்வா முகுந்தன். பாடிவயவர் – நிருசன். வடிவமைப்பு- நிரு&வினு. உதவி இயக்கம்- அகிலன், சயந்த்

Pml media இன் தயாரிப்பில் இது இரண்டாவது முழுநீளத்திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புக்கள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், வெகுவிரைவிலேயே நம் கலைஞர்களின் திறமையை திரையில் கண்டுகளிக்கலாம்.

நண்பர்கள் அனைவருக்கும் தமிழிதழின் வாழ்த்துக்கள்.

 

 

Kattukathai குறுந்திரைப்பட ட்ரெய்லர்

‘Kattukathai’ குறுந்திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்கள் இயக்குநர் Vikie Smiter மற்றும் குழுவினர். 5 வெவ்வேறு சம்பவங்களின் கோர்வையாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் Kishore Rajkumar, Sugan, P Nambi Nambi, Jeni Sh, Senthil Vijay V, Selva Kumar, Teju Ashwini, Nivetha Baskaran, Caroline Hiltrud, Ashok Kumar, Vignesh Ravi மற்றும் பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு Jones Rupert Niranjan இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – Ashwanth Rajan Dayal. எதிர்வரும் 26 ஆம் திகதி…

கே.ஜே.யின் ‘பஜாரிப்பெட்டை’ விரைவில்

கே.ஜே.யின் இயக்கத்தில் ‘பஜாரிப்பெட்டை’ உருவாகி வருகிறது. நடிப்பு – குகனி டீகே, மிதுனா, அரவிந்தன், சித்தார, துவா , சிந்து, சசிகரன் யோ மற்றும் பலர். ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியம். படத்தொகுப்பு – சசிகரன் யோ. இசை, பாடியவர் – மொஹமட் சமில் ஜீ . வரிகள் – தனு தனுசன். இசை மற்றும் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட ஒளித்தொகுப்பு வேலைகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெகுவிரைவிலேயே ‘பஜாரிப்பெட்டை’யை நீங்கள் ரசிக்கலாம். கலைஞர்களின் இம் முயற்சி வெற்றியடைய…

உறவுகளை தேடும் ‘எங்கே?’ காணொளிப்பாடல்

ஈழத்தில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு சமர்ப்பணமாக வெளியாகியுள்ளது, ‘எங்கே?’ காணொளிப்பாடல். பேரினவாதத்தின் போர் அனைத்தையும் பறிகொண்டு விட்டபோதும், தொடர்ந்தும் பழிவாங்கப்படுகிறது நம் தமிழ் இனம். இப்போது அவர்களின் மிக முக்கிய கோரிக்கை, காணாமல் போன தம் உறவுகளை மீட்டுத் தாருங்கள் என்பது தான். குறைந்தபட்சம், அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா என்பதையெனும் அறியத்தாருங்கள் என கோருகிறார்கள். கடந்து விட்ட இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ கதவுகளை தட்டியாகிவிட்டது. பலர், கால்களிலும் விழுந்தாகிவிட்டது. உண்ணும் உணவைத்…

நாளையதினம் ‘கோடாலி’ டீஸர்

‘கோடாலி’ குறுந்திரைப்படத்தின் டீஸர் நாளையதினம் வெளியாகவுள்ளது.

நாளை காலை 7 மணியளவில் LBM brother s பேஸ்புக் பக்கத்தில் இந்த டீஸர் வெளியாகும் என இயக்குநர் கதிர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கலைஞர்களின் இந்த முயற்சி வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்.

‘THE TRIP TO THE BUNKER’ யாரும் போக விரும்பாத பயணம்

உக்கிர போர், நம்மிடமிருந்து அனைத்தையும் நிரந்தரமாக பறித்து சென்று விட்டது. உயிர், உடமை, நிம்மதி, எதிர்காலம், சந்தோஷம்  இப்படி நாம் இழந்தவை எத்தனை எத்தனையோ. ஆண்டுகள் பல கடந்துவிட்டது; இதில் எதுவும் திரும்பி கிடைத்துவிடப் போவதில்லை, அது சாத்தியமும் இல்லை. ஆனாலும்,  மனம் புழுவாய் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்த தவிப்பை, ஏக்கத்தை, போரின் கோரத்தை வெளிச்சம்போட்டு காட்டும் ஆவணப் படமாக வெளியாகியுள்ளது, ‘THE TRIP TO THE BUNKER’ (பதுங்கு குழிக்கான பயணம்). தமிழ் உப தலைப்புடன் ஆங்கிலத்தில்…

Sajeethஇன் ‘4 அர்த்தம்’ டீஸர்

 

Sajeethஇன் இயக்கத்தில் த்ரில் கலந்த குறுந்திரைப்படமாக உருவாகி வருகிறது, ‘4 அர்த்தம்’.

வெகுவிரைவில் இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதன் டீஸர் உத்தியோகப்பூர்வமாக பகிரப்பட்டுள்ளது.