புவிகரனின் ‘தேடல் 2050’

  பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருந்த புவிகரனின் ‘தேடல் 2050’ குறுந்திரைப்படம் உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ளது. உலகம் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நாளுக்கு நாள் மனிதன், இயற்கையின் வரத்தை தொலைத்துக் கொண்டே இருக்கிறான். சுத்தமான காற்றைத் தொடர்ந்து இப்போது குடிநீரை நிரந்தரமாக தொலைத்து விடப்போராடிக் கொண்டிருக்கிறான். இதே நிலை நீடித்தால் நாளை நம் சந்ததியின் நிலை? இதை கருப்பொருளாகக் கொண்டு உருவாகியிருக்கும் குறுந்திரைப்படம் தான், ‘தேடல் 2050’. ராஜன் செல்வாவின் கதை, சற்றே வேடிக்கையாகத் தெரிந்தாலும், இது…

Kstarஇன் தயாரிப்பில் ‘திருடன்’

Kstarஇன் தயாரிப்பில் வெகுவிரைவில் வெளியாகவுள்ள குறுந்திரைப்படம், ‘திருடன்’. இதன் டீஸர் நேற்றையதினம் உத்தியோகப்பூர்வமாக வெளியானது.

கலைஞர்களின் இம்முயற்சி வெற்றிபெற தமிழிதழின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுவிஸ்ஸில் ‘தமிழன் 24 விருதுகள்’ விழா

‘தமிழன் 24 விருதுகள்’ விழா சுவிஸ் நாட்டில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி மிகப் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வை நிகிதா, குமணன் ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர்.

‘முற்றும் விழிகள்’ டீஸர் வெளியானது

 

‘முற்றும் விழிகள்’ குறுந்திரைப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டு பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருந்த குழுவினர், தற்போது படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளனர்.

படத்திற்கு Thanussanth இசையமைத்துள்ளார். இயக்கம் – Vithu. செம்மையாக்கம் – Aravinth. நடிப்பு – Anojen,Nirojen,S.M.Karan,Kristy,Sivajanam.

வெகுவிரைவில் இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களின் ஆதரவை எதிர்ப்பார்த்துள்ளார்கள், படக் குழுவினர். அவர்கள் அனைவருக்கும் தமிழதழின் வாழ்த்துக்கள்.

 

VenuTharanனின் ‘மண்டையோடு நாய் நக்கும்’

  VenuTharanனின் இயக்கம், Theesan Velaவின் இசை, Janaga Perandiஇன் வரிகளில் வெகுவிரைவில் வெளியாகவுள்ள காணொளிப்பாடல் ‘மண்டையோடு நாய் நக்கும்’. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புங்குடுதீவு வித்தியா கொலை சம்பவத்தை கருப்பொருளாகக் கொண்டு வெளிவரவிருக்கும் இப்பாடலின் முன்னோட்டத்தை VenuTharan மற்றும் குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். வித்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தயாராகிவரும் இந்த படைப்புக்கு ரசிகர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் நம் கலைஞர்கள். அவர்களின்…

அச்சுறுத்த வருகிறது ‘ஆட்கொல்லி’

Dilojan இயக்கம் மற்றும் Sajay இசையில் அச்சுறுத்த வருகிறது ‘ஆட்கொல்லி’.

படப்பிடிப்பு தொடர்ந்து வரும் நிலையில் அதன் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளார்கள் கலைஞர்கள்.

விதுவின் இயக்கத்தில் ‘முற்றும் விழிகள்’

விதுவின் இயக்கத்தில் வெகுவிரைவில் வெளியாகவுள்ள குறுந்திரைப்படம் முற்றும் விழிகள்.

இதன் முதல் தோற்றம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘குற்றம் உன்னைத் துரத்தும்’ ட்ரெய்லர் இதோ…

 

Steven M Godwin இயக்கத்தில் வெளியாகவுள்ள குறுந்திரைப்படம் ‘குற்றம் உன்னைத் துரத்தும்’. சமீபத்தில் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்ட குழுவினர், இப்போது ட்ரெய்லரை வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்கள்.

படத்திற்கு இசையமைத்துள்ளார் – nafeez. ஒளிப்பதிவு – reminath ajay. நடிப்பு – Sanathanan, Prasadh, Rifkhan, Jewon, Roshan, Praveen, Pragash, Roy, Pradeep.

 

சத்தியா கிரிஷ்ஷின் இயக்கத்தில் ‘Nadhivellam’

சத்தியா கிரிஷ்ஷின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் குறுந்திரைப்படம் தான், ‘Nadhivellam’. இசை – Jones Rupert Niranjan, செம்மையாக்கம் – Vijay Andrews.

நடிப்பு – Vignesh shanmugam , snigdah , ramsundar , umbrella. கலைஞர்களின் இந்த முயற்சி வெற்றியடைய தமிழிதழின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ERPAAYO டீஸர் இதோ…

ERPAAYO காணொளிப்பாடலின் உத்தியோகப்பூர்வ டீஸரை வெளியிட்டு எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளார்கள், இயக்குநர் Denojan Rishikeswaran மற்றும் குழுவினர்.

பாடலுக்கு இசை, வரிகள் மற்றும் குரல் – FS PROD. Ali Aliov, Suvetha Segar, Mithu V FsProd, FsProd Vinu-Shan , FsProd Vithi Kanesh உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

எதிர்வரும் 25ஆம் திகதியன்று இந்த காணொளிப்பாடலை வெளியிட கலைஞர்கள் தீர்மானித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வியாழனன்று வெளிவருகிறது ‘UsureTholaichan’

Suria Velan & Stephen Zechariah சகோதரர்களின் கூட்டு முயற்சியில் உருவாகி வரும் காணொளிப்பாடல், ‘UsureTholaichan’

எதிர்வரும் 11 ஆம் திகதியன்று இக் கலைப்படைப்பை வெளியிட தீர்மானித்துள்ள கலைஞர்கள், அது தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்த்துள்ளார்கள்.

‘RHYTHM OF LIFE’ன் டீஸர் வெளியானது

விஷால் சந்திரசேகர், சாம் போல், நிஸார், அஷ்வின், காவ்யா மற்றும் பலரின் பங்களிப்பில் உருவாகி வரும் வெகுவிரைவில் வெளியாவுள்ளது.

இதன் முதல் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.