‘வெள்ளைப் பூவே’ காணொளிப்பாடல்

ADK SRIRASCOL, TEEJAY ஆகியோரின் கூட்டு முயற்சியில் வெளியாகியிருக்கிறது, ‘வெள்ளைப் பூவே’ காணொளிப்பாடல். பாடலின் மிகப்பெரிய பலம், ரப் இசை. ஆரம்பத்தில் மென்மையாக பயணிக்கும் பாடல் இதனாலேயே வேகமெடுக்கிறது. பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து ரசிக்கவைக்கிறது. அலட்டல் இல்லாத காட்சியமைப்பு, பின்னணி இசை, பாடகர்கள் என அனைத்தும் நிறைவாகவே உள்ளது. அனைவரும் தங்கள் பங்களிப்பை நிறைவாகவே தந்துள்ளார்கள். காதல் ரசம் சொட்டும் வரிகள் இனிமை. ஆனால், அந்த இனிமையை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளமுடியாதபடி உச்சரிப்புப் பிழை தடுத்துவிடுகிறது. இதை…

யாழ். ராஜா 2 திரையரங்கில் ‘அறமுற்றுகை’

மயன் காந்தன், மதிசுதா, யோசித்தன், சிவராஜ் மற்றும் பல கலைஞர்களின் பங்களிப்போடு ‘அறமுற்றுகை’ குறுந்திரைப்படம், எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். ராஜா 2 திரையரங்கில் திரையிடப்படுகிறது.

Master screen jaffna வின் தயாரிப்பில் வெளியாகும் இத்திரைப்படத்திற்கு அனைவரது ஆதரவையும் வேண்டி நிற்கிறார்கள் கலைஞர்கள்.

நம் கலைஞர்களின் இப்புதிய முயற்சி வெற்றி பெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.

மே தினத்தில் ‘குருதிப் பூக்கள்’

ஈழத்து காதலை மையப்படுத்தி உருவாகி வரும் ‘குருதிப் பூக்கள்’ காணொளிப்பாடல், எதிர்வரும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் திகதியன்று வெளியாகவுள்ளது.

கதிரின் இயக்கம் மற்றும் பலரின் ஒத்துழைப்புடன் உருவாகிவரும் இந்த புதிய படைப்பு வெற்றி பெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.

 

 

Ben Humanனின் ‘Shape of Hamma’

Edited & Colour – Ben Human Music Rearranged, Mixed & Mastered – M.Kowtham (Germany) Shape of You Tamil Lyrics – Ben Human Cinematography DigitalPro Productions (Denmark) Original song credits – “Shape of You” by Ed Sheeran, “Antha Arabic Kadaloram” by A.R. Rahman (Movie: Bombay)   பாடல், நடிப்பு, நடனம் என பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள Ben Humanனின் புதிய…

வெகு விரைவில் ‘யார் குற்றவாளி?’

ஜீவஸ்வரனின் இயக்கத்தில் வெகு விரைவில் வெளியாகவிருக்கிறது, ‘யார் குற்றவாளி?’ குறுந்திரைப்படம்.
 
படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள குழுவினர், அனைவரது ஆதரவையும் எதிர்ப்பார்த்துள்ளார்கள்.
 
அவர்களின் இந்த புதிய முயற்சிக்கு தமிழிதழின் வாழ்த்துக்கள்.

வெகு விரைவில் ‘தூரிகைப் பெண்ணே’

செல்வா முகுந்தனின் இயக்கத்தில், சுதர்சனின் இசை மற்றும் மயூரா சங்கர், லக்ஸ் ஆகியோரின் இனிமையான குரல்களில் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து படைக்கப் போகிறது ‘தூரிகைப் பெண்ணே’ காணொளிப்பாடல்.

நடிப்பு – ஜெய்வி, சாகானா மற்றும் இளங்கோ, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு – ராஜபேட்சிறில்.

இளைஞர்களின் இந்த கூட்டு முயற்சி வெற்றிபெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.

‘Presage’ இளைஞர்களின் கலாட்டா

  Director : Aakil Ishak Writer : Mohamed Irfath Cinematography : Arqam Muneer Music : Praveen MTZ Cast :  Salman Thawfeek AS Arun Subramaniam, Kathir AS Karthik , Zeeshan AS Himself, Nashan AS Himself, Farhad Khalib AS Interveiwer   அகில் இஷாக்கின் இயக்கத்தில், மொஹமட் இர்பாத்தின் எழுத்தில் வெளியாகியிருக்கும் குறுந்திரைப்படம் Presage. க்ரைம், த்ரில்லர் வகை படமாக ஆரம்பத்தில் மிரட்டும் இந்த…

மிரட்டுகிறாள் ‘பஞ்சமி’

கிஷோரின் இயக்கத்தில்சக்தி production வழங்கும் ‘பஞ்சமி’ குறுந்திரைப்படம் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது.

படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு மிரட்டியுள்ளார்கள் கிஷோர் மற்றும் குழுவினர்.
அதுவே, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

இந்த புதிய முயற்சி வெற்றி பெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.

பெற்றோரை நேசிக்கச் சொல்லும் ‘உள’

KDM பாலாஜியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் குறுந்திரைப்படம், ‘உள’. பெற்றோருக்கு வயதானதும் ஏற்படும் உளவியல் தாக்கத்தை, அதை பிள்ளைகள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை அமைதியாக சொல்ல விளைகிறது இந்த குறுந்திரைப்படம். உன்னி கிருஷ்ணனின் பின்னணி இசையில் அஷ்வினின் ஒளிப்பதிவு படத்தை தொடர்ந்து பார்க்க வைக்கிறது. ஆனால், கதையை இன்னும் அழகாக காட்சிப் படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. நல்ல கதைக் கரு. ஆனால், அதை காட்சிப்படுத்திய விதத்தில் தொய்வு தெரிகிறது. தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் உளவியல் தாக்கத்தை வெளிப்படுத்தும்…

ஹனி நயாகராவின் பாணியில் “மறுவார்த்தை பேசாதே…”

Re arranged , Sung Mixed And Mastered by A.Honey Niagara Rap & Rap Lyrics By Mr MC Video & Editing by Nimalan   வெளியான நாளிலிருந்து இன்று வரை அனைவர் வாயையும் அசைப்போட வைத்துக்கொண்டிருக்கும் பாடல் “மறுவார்த்தை பேசாதே…” ‘என்னை நோக்கிப் பாயும்தோட்டா’ திரைப்படத்தில் இடம்பெறும் இந்த பாடலை, ரப் இசையுடன் கோர்த்து வித்தியாசமாக தந்துள்ளார்கள் ஹனி நயாகரா குழுவினர். ஒரிஜினல் வேஷனிலிருந்து பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை…