GTAA & தமிழிதழ் பெருமையுடன் வழங்கும் சாதனைத்தமிழா 2013 காணொளியின் முன்னோட்டம்

யூன் மாதம் 20 ம் திகதி(20.06.2014) நடைபெறவுள்ள , சாதனைத் தமிழா 2013 விருது வழங்கும் விழாவின் அறிமுக நிகழ்வும், பத்திரிகையாளர் சந்திப்பும் 19.03.2014 , புதன் கிழமை வெம்பிலி பகுதியில் நடைபெற்றது. ஊடகத்துறை நண்பர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கலையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வில் சாதனைத் தமிழா விருதுகள் பற்றிய விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு, சாதனைத் தமிழாவின் உத்தியோகபூர்வ இணயத்தளம், சாதனைத் தமிழா விருதின் மாதிரி வெளிவடிவம், சாதனைத் தமிழா விருதின்…

தமிழிதழின் நேரடி பங்களிப்பில் நாளை டென்மார்க் திரையரங்கில் “உயிர்வரை இனித்தாய்” திரைப்படம் பிரமாண்ட வெளியீடு..!

பிரத்தியேகமாக தமிழிதழ் ஊடகத்தின் நேரடி பங்களிப்பில், டென்மார்க் கலைஞர்கள், ஐரோப்பிய கலைஞர்கள் மற்றும் தமிழிதழ் குழுவினர்கள் இணைந்து திரைப்படத்தின் தொடக்க நிகழ்வுகளை டென்மார்க்””கேர்னிங் பயோ சிற்றி” திரையரங்கில் சிறப்பிக்கவுள்ளார்கள். நீண்ட கால முயற்சியில், டென்மார்க் கலைஞர்கள் ஒன்றிணைந்து இத்திரைப்படத்திற்க்காக உழைத்திருக்கிறார்கள், சில மாதங்களுக்கு முன் படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்து மிக வரவேற்பை பெற்றது யாவரும் அறிந்ததே, நகைச்சுவை, பாடல், நடனம், காதல் என்று கமெர்சியல் களத்துடன் களமிறங்கும் “உயிர் வரை” இனித்தாய் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வயிட அலைமோதும்…

பிரான்சில் 28 மார்ச் அன்று ஓவியர் வாசுகன் அவர்களின் “ஓவிய கண்காட்சி”, சிறப்பு அழைப்பிதழ்..!

கலை என்கின்ற ஒற்றை சொல்லில் எம்மவர்கள் விதைத்து வரும் படைப்புகளில் பெரிதாக பேசப்படாத, முக்கியமாக பேச படவேண்டிய, பாரட்டபட வேண்டிய ஒரு அற்புத கலைதான் ஓவியம். மொழி, இனம், கலாச்சாரம், என்று எல்லைகள் கடந்து அனைத்து தரப்பினரையும் உணர்வு பூர்வமாக, சிந்திக்க வைக்கும் கண்கவரும் ஓர் நுற்பமான கலை தான் ஓவியம், அப்டிபட்ட ஓர் கலையை நாடு கடந்து ஐரோப்பா மண்ணில் சாதனை படைக்க துடிக்கும் புகழ் பெற்று வரும் இளம் கலைஞன் ஓவியர் வாசுகன் அவர்கள்.…

பிரித்தானியாவில் A Gun & A Ring திரையிடல்

  ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் (A Gun & a Ring), 2013 ஆம் ஆண்டு கனடாவில் தயாராகி, வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இது சூன் 19, 2013 அன்று சீனாவின் சாங்காய் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில், போட்டிக்காகத் திரையிடப்பட்ட முதலாவது தமிழ்த் திரைப்படமாகும். 112 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்தும் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களில் 12 படங்கள் மட்டுமே போட்டிக்குத் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. இத்திரைப்படத்தை 1999 என்னும் திரைப்படத்தை…

“தமிழ் காத்து – 2014” ஈழத்தமிழ் கலைஞர்களின் படைப்புக்களின் பிரசவகளம்

தமிழிதழ் இணைய ஆதரவில் சுவிஸ் – பாசெல் மாநகரில் “TRX தமிழ் காற்று” வானொலியின் ஆறாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஐரோப்பா வாழ் ஈழத்து கலைஞர்களை ஒன்றிணைத்து 02.03.2014 அன்று மாபெரும் நிகழ்வாக நடைபெறவுள்ளது TRX இன் “தமிழ் காத்து – 2014” நிகழ்வு. வருடாவருடம் நடைபெறும் இந்நிகழ்வானது இவ்வருடம் மிகச்சிறப்பாக நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் ஈழத்தமிழ் கலைஞர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பல்வேறு கலை இலக்கிய மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக…. –…

தமிழிதழ் ஊடக ஆதரவில் – Tatto கலந்து சிறப்பிக்கும் “இசைக் கொண்டாட்டம்”

தமிழிதழ் ஊடக ஆதரவில் சுவிட்சர்லாந்தில் பேர்ன் மாநகரில் நத்தார் பண்டிகையை குதுகலமாய் வரவேற்க 25.12.2013 மாலை 4:00 மணிக்கு ஐரோப்பிய புகழ் கரோலின் இசைக்குழுவின் “இசைக் கொண்டாட்டம்”

DJ Night ஜெயா அவர்களின் நெறிப்படுத்தலில் இசை நிகழ்ச்சியோடு மேலைத்தேய நடனங்களும் இடம்பெற காத்திருக்கிறது.
இசைக் கொண்டாட்டத்தில் பல்துறை கலைஞன் TATTO கலந்துகொண்டு சிறப்பு நிகழ்வினை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

isaikondaaddam

“இசை துள்ளல்-2013” ஐரோப்பா தழுவிய மாபெரும் நடன போட்டி நிகழ்ச்சி

சுவிஸ் சென்னை சில்க்ஸ் பேராதரவில் சுவிஸ் தமிழ் கலைமன்றம் பெருமையுடன் வழங்கும் சோலோ மூவிஸ்-ன் “இசை துள்ளல் 2013” – ஐரோப்பா தழுவிய மாபெரும் நடன போட்டி நிகழ்ச்சி. வருடந்தோறும் நடைபெற்றுவரும் “இசை துள்ளல்” நிகழ்வானது இவ்வருடமும் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. தமிழிதழ் , லங்காஸ்ரீ ஊடக ஆதரவில் சுவிஸ் வர்த்தக பெருமக்களின் பெராதரவிலும் 28.12.2013 மற்றும் 29.12.2013 ஆகிய நாட்களில் சுவிஸ் சொலோதுர்ன் மாநகரில் நடைபெறவுள்ளது. போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் 22.12.2013 க்கு முன்னதாக கிடைக்குமாறு…

இசையுத்தம் 2013 – IsaiYutham-Season2013 THE GRAND FINALE SHOW

“இசையுத்தம்” தெரிவுப்போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் இடையே எதிர்வரும் 14 செப்டம்பர் 2013 அன்று இறுதிப்போட்டி  Kriens (Luzern) ல் 15:00 மணிக்கு நடைபெற உள்ளது. இறுதிபோட்டியில் பங்குபெறும் குழுக்கள்: – St.Gallen Sound Of Melodies – Basel The Drops – Fribourg Isai Iraagangal – Basel Tune Flowers இந்த ஆண்டு கூடுதல் சிறப்பு நிகழ்ச்சிகளாக BlackWalkers, BoomBoys மற்றும் Lashya  போன்ற பிரபல நடன  குழுக்களின் நடன நிகழ்வுகளுடன், கடந்த ஆண்டு IsaiYutham வெற்றியாளர்கள்…

சுவிஸ் லுட்சேர்ன் மாநகரில் “கலை மாலை” 2013

சுவிஸ் நாட்டில் தமிழர்கள் வாழும் முக்கிய நகரங்களில் ஒன்றான லுட்சேர்ன் மாநகரில் “கலை மாலை” 2013 நிகழ்வு 12.05.2013 அன்று நடைபெறவிருக்கிறது. BOOM Boys, United Dancers மற்றும் பல வளர்ந்துவரும் குழுக்களின் மேற்கத்திய நடனங்கள், வேந்தனின் “ராக ஸ்ருதி” இசைக்குழுவின் நேரடி இசைநிகழ்வு, பாரத நாட்டியம், நகைச்சுவை நிகழ்வுகள் என்பவற்றுடன், சிறப்பு நிகழ்வுகளாக Black Town Recordzz இன் இசை நிகழ்வும், தமிழிதழ் தயாரிப்பில் வெளியான ATunes இன் TEFA Anthem (தமிழீழ உதைபந்தாட்ட அணிக்கான…