நீண்ட இடைவெளியின் பின்னர் TSProd ன் “குடும்பம்” இசை நாடகம்

உண்மைக்கதையை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் “குடும்பம்” இசை நாடகம் வெளியாகியுள்ளது. இருதலைமுறையினரிடையே நடைபெறும் உறவுப் போராட்டமே இந்த “குடும்பம்” காணொளி பாடல். நீண்ட கால இடைவெளியின் பின்னர் TS Prod கலைஞர்கள் தங்கள் “நிருபிக்க எதுவுமில்லை” இசைத்தொகுப்பில் இடம்பெற்ற பாடலுக்கு காணொளி வடிவம் கொடுத்துள்ளனர். TSProd கலைஞர்களுடன் இயக்குனரும் நடிகருமான ரமணன், தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துவரும் சுவிஸ் ரமேஷ், சுகந்தி மற்றும் வேந்தன் ஆகியோரும் குடும்பத்தில் அங்கம் வகித்துள்ளனர். Banner: TS-PROD In Association with Echo8 Productions…

புலம் பெயர் தமிழர்கள் பாடும் “ஊர விட்டு வந்த நானும்” (காணொளி பாடல்)

வெளிநாட்டு வாழ் சொந்தங்களின் சோக கதையை கூறும் வகையில் உருவான ”ஊர விட்டு வந்த நானும்” பாடலின் வீடியோ வடிவம்.
இப்பாடல் புலம் பெயர் தமிழர்கள் படும் துன்பங்களுக்கு சமர்ப்பணமாக இருக்கும் என எண்ணுகின்றோம்.
வரிகள் – முள்ளியவளை சுதர்சன்
இசை மற்றும் குரல் – தீபன்

”ஊர விட்டு வந்த நானும்” பாடல் குழுவினருக்கு தமிழிதழ் இணையத்தளம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நகைச்சுவையோடு கருத்து சொல்லும் “துலைக்கோ போறியள்” குறும்படம்

யாழ்ப்பாணத்தின் அருகி வரும் ஒரு மொழி வழக்கை தலைப்பாகக் கொண்டு மதிசுதாவின் உருவாக்கத்தில் உருவாகியிருக்கும் “துலைக்கோ போறியள்” (எங்கே போகிறீர்கள்) என்ற சமூக கருத்துக்களை தாங்கி வரும் இவ் நகைச்சுவைக் குறும்படத்தில் ஏரம்பு, ஜெகதீபன், செல்வம், சுதேசினி, செல்லா போன்றோருடன் மதிசுதாவும் நடித்திருக்க செல்வம், அற்புதன், மதுரன், ஜீவன், வேல்முருகன், குகரூபன் கமராவுக்குப் பின்னான மெருகூட்டலை செய்திருக்கிறார்கள்… “துலைக்கோ போறியள்” குறும்படக் குழுவினருக்கு தமிழிதழ் இணையத்தளம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். “துலைக்கோ போறியள்” குறும்பட விமர்சனத்தை…

ஈழத்திலிருந்து உண்மைக்கதையை மையமாகக்கொண்ட “போலி” குறும்படம்

‘Lily’s Cine Creations’ தயாரிப்பில் “போலி” உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட Prem Je Lily அவர்களின் முதல் தமிழ் குறும்படம்

கதை மற்றும் இயக்கம்: பிரேம் ஜே லில்லி
ஒளிப்பதிவு: பாலமுரளி மற்றும் S.ராஜ்
எடிட்டிங்: செந்தூரன்
இசை: சங்கீத் சுதா

Story and Directed by : Prem Je Lilly
Cinematography : Balamurali & S.Raj
Editing : Senduran
Music : Sangeeth Sudha

 

எமக்கான அடையாளம் எதுவெனக்கூறும் “இழிநிலை” (Izhi nilai) குறும்படம்

    “எமது மொழி எங்களின் அடையாளம் அதை இழந்தோம் வரலாற்றின் வாசல்களில் தூக்கி எறியப்படுவோம்” என்ற யதார்த்தமான எச்சரிக்கை வாசகாத்துடன் ஆரம்பிக்கிறது அகீபன் அவர்களின் “இழிநிலை” குறும்படம். பிறவுண் மீடீயா தயாரிப்பில் இன்றைய காலத்தின் கட்டாய கடமையை உணர்த்தும் சிறந்த குறும்படமாக வெளிவந்துள்ளது. இது தாய்மொழியை அறியாத அனைத்து சமூகங்களுக்கும் ஒரு பாடமாக அமைகிறது. தமிழிதழ் இணையத்தளம் சார்பாக “இழிநிலை” குறும்படக் குழுவினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.   இழிநிலை”Izhi nilai” [Tamil short-film] by…

புதிய திறமைகளுக்கு களம் அமைத்து மகுடம் சூட்டிய – Solo வின் இசைத்துள்ளல் 2013

தமிழிதழ் ஊடக ஆதரவில் சுவிஸ் சென்னை சில்க்ஸ் பேராதரவில் சுவிஸ் தமிழ் கலைமன்றம் பெருமையுடன் வழங்கும் சோலோ மூவிஸ்-ன் “இசை துள்ளல் 2013” – ஐரோப்பா தழுவிய மாபெரும் நடன போட்டி நிகழ்வானது 28.12.2013 மற்றும் 29.12.2013 ஆகிய நாட்களில் சுவிஸ் சொலோதுர்ன் மாநகரில் மிக பிரமாண்டமாக நடந்தேறியுள்ளது. குழு மற்றும் தனி பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் பல திறமையான குழுக்களும், தனி நடனக் கலைஞர்களும் போட்டியிட்டனர். நடுவர்களாக தென்னிந்திய கலைஞர்களான Vijay TV புகழ் DD…

சிறப்பாக நடைபெற்ற இளமை புதுமை நிகழ்வும் இறுவட்டு வெளியீடும்

சுவிஸ் ஒன்சிங்கென் நகரில்  தமிழிதழ் ஊடக ஆதரவில் Swiss Rhythams மற்றும்  ATunes இணைந்து வழங்கிய “இளமை புதுமை”(Young & Fresh – Tamil Emerging Artist Show) வளர்ந்துவரும் வளர்ந்துவரும் கலைஞர்களின் மாபெரும் கலைநிகழ்வு 14.12.2013 மிகச்சிறப்பாக  நடந்தேறியுள்ளது ஐரோப்பிய முன்னணி நடனக்குழுக்கள், இசைகலைஞர்கள், நகைச்சுவைகலைஞர்கள், நாடகக் குழுக்கள் பங்குபற்றி நிகழ்வினை சிறப்பித்தனர். இளையோர்களின் புதியதொருமுயர்சி வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு  எம்மவர்மத்தியில் கிடைத்த ஆதரவை நிகழ்வு மன்றமே பறைசாற்றி இருந்தது. தென்னிந்திய சினிமாவில் நடிப்புத்துறையில்…

பரிஸ் தமிழ் திரைவிழா – ஈழ சினிமா வரலாற்றில் ஓர் மைல் கல்

  பாரிஸ் தமிழ்த் திரை விழா என்பது எமது ஈழத்திற்கென ஒரு திரைத்துறை ஒன்றை கட்டியெழுப்பும் வண்ணம், எமது படைப்பாளிகளுக்கு ஊக்கத்தை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விழா. Paris Tamil Film Festival 23/24/25 August 2013 at Thangavayal Thiraiyarangam La chapelle (2 bis Passage Ruelle 75018 Paris) www.facebook.com/paristhiraivizha திரைப்படங்கள் இன்று புவிப்பரப்பும் சார்ந்தும், கலாச்சாரம் சார்ந்தும், இன்னும் குறிப்பாக தேசம் சார்ந்தும்தான் அதனது அடையாளங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அமெரிக்க சினிமா, ஐரோப்பிய…

‘The Rajini Effect’ சூப்பர் ஸ்டார் ஆக துடிக்கும் ஜப்பனீஸ் நகைச்சுவை – முன்னோட்டம்.

‘The Rajini Effect’ is a quirky comedy about a Japanese guy who wants to become the next big Indian movie superstar. Ever since watching his first Rajini (south Indian movie star) film in Tokyo, at the tender age of 10, there is only one thing Taiho wants to do with his life — become the…

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகும் குறும்படம் “துலைக்கோ போறியள்“

ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும். இத்தலைப்பானது வடக்கில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள். உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில்,…

”அது” குறுந்திரைப்பட முன்னோட்ட காட்சி – ”Athu” Tamil Short Film Teaser

வளர்ந்து வரும் இளம் கலைஞர்களினால் யாழ்ப்பாணத்தில் ஒரு திரில்லர் வகையை சேர்ந்த குறும்படம் ஒன்றை S.K லோககாந்தன் அவர்கள் உருவாக்கியுள்ளார். சர்வன் எழுத்தில் இசையமைப்பாளர் யதுர்சனின் இசையில் லோககாந்தன் இயக்கத்தில்  வெளிவரவிருக்கும் இந்த குறும்படத்தில்  சங்கர்,றெஜி   ஆகியோர் நடித்துள்ளனர். இதன் முன்னோட்ட காட்சியை வெளியிட்டுள்ளனர். வெகு விரைவில் இத்திரைப்படம் “அது” எனும் பெயரில் மக்கள் மனதில் இடம்பிடிக்கும்.

Rajestone Production
https://www.facebook.com/RAJESTONEVIDEO
Written-Sarvan
A Film By- Logakanthan
https://www.facebook.com/LOGAKANTHAN
Music-Sri jathursan
Cast-Sangar and Reji

 

 

தினப்பயணம் (Thinapayanam) விருதுகள் பெற்ற தமிழ் குறும்படம்

குறும்பட விழாக்களில் பல விருதுககளை வென்ற குறும்படம் தினப்பயணம் (Thinapayanam) அவதாரம் தயாரிப்பில் சதாப்பிரனவன் இயக்கத்தில் டேசுபனின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பிலும், விக்ரம் அவர்களின் இசையிலும் பாஸ்கரன், சதாப்பிரனவன், ரஞ்சித் ஆகியோரின் நடிப்பில் 2010 ம் ஆண்டு தயாரான இக்குறும்படம் தமிழ் குறும்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது. விருதுகள் ☼  சிறந்த நடிகருக்கான விருது (சதாப்பிரனவன் – Sathapranavan) – திருவள்ளுவர் குறும்பட விழா(இந்தியா 2013) ☼  சிறந்த படத்தொகுப்பு (டேசுபன் – Desuban) –விம்பம் குறும்பட விழா (லண்டன் 2012) ☼  “IASF” Independent Art Film…