போராளிக்கு இட்ட பெயர் சதா. பிரணவனின் பல பரிசுகள் வென்ற குறும்படம்..

அவதாரம் தயாரிப்பில், சதாபிரணவன், நாக  கோணேஷ், ம.பாஸ்கரன் மற்றும் விஜிதனின் நடிப்பில், சதாபிரணவன் இயக்கி டெசுபனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் M.R. ரஹிஸ் இசையில் பிரான்சில் உருவாக்கப்பட்டுள்ளது ”போராளிக்கு இட்ட பெயர்” குறும்படம். இணை இயக்கம் விஜிதன், உதவி ஒளிப்பதிவு சுரேந்திரன், ஒலி வடிவமைப்பு பிரதாப். பாரிஸைத் தமிழ்க் குறும்பட மறுமலர்ச்சியின் தாயகம் எனத் தயக்கமின்றிச் சொல்லவேண்டும். அந்த நகரின் தமிழ்க் குறும்படக் கலைஞர்கள் திட்டமிட்டதொரு ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து குறும்படங்களைக் கொண்டுவரும் ஒரு பட்டறைபோல இயங்கத் துவங்கியிருக்கிறார்கள். திறன் வாய்ந்த நடிகர்களாலும் தொழில்நுட்பக்…

மட்டுநகர் பத்மநாதன் கோவர்த்தனனின் “CHECK MATE” குறும்பட வெளியீடு

எம் மீன் பாடும் தேனாட்டில் பிறந்து இன்று குறும்பட தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஈடுபட்டிருக்கின்ற ஒரு இளைஞருடைய குறும்படத்தின் முன்னோட்ட பதிவை  வெளியிடுவதில் எமது இணையத்தளம் இன்று மீண்டும் பெருமையடைகின்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர் .இவர் தற்போது திருச்சி பல்கலைகழகத்தில் ஹோட்டல் முகாமைத்துவத்தில் தனது டிப்ளோமாவினை நிறைவு செய்துள்ளார்.                …

சுஜீத்.ஜி -ன் “பொறாமை” சொல்லிசை காணொளி

சுஜீத்.ஜி -ன் “பொறாமை” சொல்லிசை காணொளி வெளியகியுள்ளது. சமுதாய கருத்துகளை தமது சொல்லிசை மூலமாக வெளிக்கொணரும் மிகச்சிறந்த கலைஞனாக அறியப்பட்ட சுஜீத்.ஜி தனது உள்ளக்குமுறல்களை “பொறாமை” பாடல் மூலமாக வெளிக்காட்டியுள்ளார். சுஜீத்.ஜி -ன் சமுதாய படைப்புக்கள் http://www.sujeethg.com/discography/ 01. கலை 02. தாய்மொழி 03. எல்லாம் காசு 04. என்ன மறந்து 05. கடவுள் 06. கோழை 07. இராவண்னன் 08. புதுயுகம் 09. தமிழர் குடி 10. பூமராங் 11. ஈழதேசம் 12. மக்கள் போர் 13. தமிழர் புரட்சி 14. யார்க்கும்…

“வயசு 18” இளைஞர்களின் “இருமுகம்” முழுநீள திரைப்படம்.

“வயசு 18” இளைஞர்களின் “இருமுகம்” முழுநீள திரைப்படம், “வயசு 18” எனும் தொடர் குறும்படங்களை வெளியிட்டுவந்த சுவிஸ் இளம் கலைஞர்கள், தம்முடன் பல ஆர்வமுள்ள கலைஞர்களை ஒன்றிணைத்து “இருமுகம்” என்னும் முழுநீள திரைப்படமொன்றினை வெளியிட தயாராகி வருகின்றார்கள். விரைவில் திரையரங்கில் வெளிவரவிருக்கும் “இருமுகம்” முழுநீள திரைப்படத்தின் முன்னோட்டகாட்சி வெளியாகியுள்ளது.   இத்திரைப்படத்தினை சுவிஸ் வாழ்தமிழ் மக்கள் அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்த்து உங்கள் ஆதரவினையும், கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று தாழ்மையுடம் கேட்டுக்கொள்கின்றோம்.   “இருமுகம்” முழுநீள திரைப்படம் வெற்றிபெற எமது வாழ்த்துக்களை…

அவதாரம் டேசுபன் – TagTamil நேர்காணல்

அவதாரம் எடிட்டர் டேசுபன் – TagTamil இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.

பல விருதுகளை வென்ற பிரான்ஸ் அவதாரம் குழுமத்தின் முன்னணி ஒளிப்பதிவு மற்றும் ஒளிக்கலவை கலைஞன் டேசுபன் தற்போது ஈழத்தமிழர் சார்ந்த திரைப்படம் ஒன்றிலும் தனது பங்களிப்பை வழங்கிவருகிறார்.

அவருடைய கலைப்பயணம் மென்மேலும் பல படிகளை தாண்ட தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்கள்.

 

 

 

தமிழ் இளையவர்களின் “Gentleman” பாடல் (சுவாரஷ்யமான காணொளி)Tamil Gentleman

சுவிஸ் தமிழ் இளையவர்களின் “Gentleman” பாடல் (Tamil Gentleman) வெளியாகியுள்ளது. “Gangnam style” உலகப் புகழ்பெற்ற “PSY” வெளியிட்ட “Gentleman” பாடலும் உலகம் பூராகவும் அறியப்பட்டு வருகிறது. அந்த வகையில் பலர் “Gentleman” பாடலை தங்கள் பாணியில் மீள் தயாரிப்பு செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. தங்கள் நடனத்திறமை, தெளிவான ஒளிப்பதிவு, நேர்த்தியான ஒளிக்கலவை, நகைச்சுவை நடிப்பு என்பவற்றின் மூலமாக இப்பாடலை வித்தியாசமாக வழங்கியிருக்கிறார்கள். “தமிழ் Gentleman” பாடல் குழுவுக்கு தமிழிதழ் இணையத்தின் வாழ்த்துக்கள்.   Dream Boys: Big-Money (Thanu) – BBoy Nissi…

ஷாங்காய்யில் கனேடிய தமிழர்களின் படைப்பான A GUN & A RING திரையிடப்படவுள்ளது

  எதிர்வரும் ஜூன்  மாதம்19ம் திகதி லெனின்.எம்சிவத்தின் இயக்கத்தில்புலம் பெயர்ந்தநாடுகளில் வசிக்கும்கலைஞர்களினால் உருவானA Gun  & A Ring என்ற தமிழ்த் திரைப்படம் 16வது ஷாங்காய் சர்வதேசத் திரைப்படவிழாவின் அதியுயர் விருதான Golden Goblet (தங்கக் குவளை) விருதுக்குப்  போட்டியிடுவதற்காக உத்தியோகபூர்வமாகத் தெரிவாகியுள்ளது என்பதை இப்படத்தினைத் தயாரித்த Eyecatch Multimedia Inc.எனும் நிறுவனத்தின் பிரதம தயாரிப்பாளரான திரு. விஷ்ணு  முரளி தெரிவித்துள்ளார். 112 நாடுகள், பிராந்தியங்களிலிருந்து போட்டிப்பிரிவுக்குச்சமர்ப்பிக்கப்பட்ட1655 திரைப்படங்களிலிருந்து12 படங்கள்மட்டுமே Golden Goblet விருதுக்கானபோட்டிக்குத் தேர்வாகியுள்ளன என்பதும்…

யாழ் இளைஞர்களின் “விட்டில்கள்” குறும்படம்


 

யாழ் இளைஞர்களின் “விட்டில்கள்” குறும்படம் வெளியாகியுள்ளது.

 

 

அண்மைக்காலமாக இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்றுவரும் அருவருக்கத்தக்க கலாச்சார சீரழிவுகளை மையமாக வைத்து நல்ல ஒரு குறும்படமாக தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

யாழில் இருந்து பல குறும்படங்கள் வந்துள்ள போதிலும் இந்த “விட்டில்கள்” குறும்படம் சற்றே வித்தியாசப்படுகிறது என்றே கூறலாம். தொழில்நுட்ப ரீதியாக ஈழத்து கலைஞர்கள் முன்னோக்கி வளர்ந்து வருவதற்கு இக்குறும்படமும் நல்ல சாட்சியாகும்.

 

கடந்த ஆண்டு அவதாரம் தயாரிப்பில் பிரசன்னாவின் இயக்கத்தில் உருவான குறும்படம் “Music For Eyes” இந்த குறும்படம் பிரான்ஸ் நாட்டில் முதல் 7 படங்களில் தெரிவு செய்யபட்டதும், கனடா நாடில் சிறந்த இசைக்கான விருதை வென்றதும் குறிப்பிடத்தக்கது. இத்தாலி நாட்டு நபர் Stefano Giust இந்த குறும்படத்தில் நடித்துள்ளார், மொழி பிரயோகம் குறைக்கப்பட்டு அனைத்து மொழியினரும் விளங்கிக்கொள்ளும் அளவுக்கு திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு,இசை என்பன பிரகாசித்துள்ளன. இது சில இனம் சார்ந்த பிரச்சினைகளை குத்திக்காட்டுவது போல் அமைந்தாலும்,…