ஈழத்துக்-கலைஞன்-அஜய்-பாடலாசிரியராகும்-facebook-காதல்

 

ஈழத்துக் கலைஞன் ”இளம் புதுமைக்கவி” அஜய் பாடலாசிரியராக அறிமுகமாகும் திரைப்படம் “Facebook காதல்”

 

 

இந்த வருடம் அதிகமான ஈழத்துகலைஞர்கள் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ”இளம் புதுமைக்கவி” அஜய். இவருடைய விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியே இந்த வாய்ப்பு.

 

கலைத்துறையில் மென்மேலும் வளர ”இளம் புதுமைக்கவி” அஜய் அவர்களுக்கு தமிழிதழ் இணையம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

‘எம்முயிர் தமிழே” இசைத்தொகுப்பு- விளம்பர பாடல்

தமிழ் இளையோர் அமைப்பு – இங்கிலாந்து (TYO UK) பெருமையுடன் வழங்கும் ”எம்முயிர் தமிழே”  இசைத்தொகுப்பு வெளியீடு செப்டம்பர் 1 ம் திகதி 2012 அன்று நடைபெறவுள்ளது. புலவர் சிவநாதன் வரிகளுக்கு ஜூட் ஜெயராஜ் இசையில் ஜாக்சன் போஸ்கோவின் குரலில் ”எம்முயிர் தமிழே”  இசைத்தொகுப்பு வெளிவரவிருக்கிறது.  அதற்கான விளம்பர பாடல் வெளியாகியுள்ளது.    ”எம்முயிர் தமிழே”  இசைத்தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் தமிழ் இளையோர் அமைப்பினர். https://www.facebook.com/tyouk.media நன்றி: கே.ரஜெந்தன் TYO UK proudly presents EMMUYIR THAMILE! Emmuyir Thamizhey Promo OUT NOW – Song to be released on 1st…

ஏய் புள்ள – முன்னோட்டம் – EY PULLA (OFFICIAL TRAILER) – SSR

ஏய் புள்ள – முன்னோட்டம் வெளியாகியுள்ளது. விரைவில் முழுமையான காணொளி பாடல் .   SOUTH SIDE RECORDS in association with iTAMIL CREATION EY PULLA LYRICS: RUPESH SINGING: LUKSHANI AND RUPESH BEAT BOXER: NELUKSHAN (NELLY) CINEMATOGRAPHY, EDITING: KAJEE KJ DANCERS: PRABHU RAJ, SKJ KARAN, SANTHOSH VIDEO SONG COMING SOON 🙂 LIKE OUR FACEBOOK PAGE AND SUPPORT US http://www.facebook.com/SouthSideRecordz http://www.facebook.com/ssr.lukshani…

“பதில்” முழு நீள திரைப்பட பாடல் வெளியீட்டு விழா – பாரிஸ்

பான்ஸ் வீடியோ” (Fans Video) தயாரிப்பில் பாரிஸ் திரைத்துறை கலைஞர்கள் இணைந்து வழங்கும் த.சுதர்சன் அவர்களின் இயக்கத்தில் “பதில்” முழு நீள திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய இசை தட்டு வெளியீட்டு விழா பாரிஸ் விநாயகர் ஆலயத்தில் 17/08/2012 அன்று சிறப்பாக நடைபெற்றது.

 “பதில்” முழு நீள திரைப்பட குழுவுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

திலீப் வர்மன் ”விழிகள் சேருமா?” விரைவில் தமிழிதழில்…

Acoustical Recordz வழங்கும் ”விழிகள் சேருமா?” (Vizhigal Seruma ?- Missing something in you…) பாடல் வெளிவரவிருக்கிறது. மலேசிய இசையமைப்பாளர் “ஒரு காதல் கதை” தீபன்(Tiban) இசையில் ”இளங்கவித் தென்றல்” சானியா மற்றும் புதுமுக பாடலாசிரியர் ஜெனிதா.R ஆகியோரின் கவி வரிகளில் பிரபல மலேசிய பாடகர் திலீப் வர்மன் இன் குரலில் வெளிவரவிருக்கிறது ”விழிகள் சேருமா?” பாடல்.
“AS Digital Dreams” அகிலன் சிவானந்தம் ஆதரவிலும் உங்கள் அபிமான தமிழிதழ் (Tamilithal.com) இணைய ஆதரவிலும் ”விழிகள் சேருமா?” பாடலை மிக விரைவில் தமிழிதழ் இணையத்தின் வாயிலாக கேட்டு மகிழலாம்.
”விழிகள் சேருமா?” பாடல் குழுவுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

”முதல் பார்வை” குறும்பட முன்னோட்டம்

DREAM MEDIA WORKS தயாரிப்பில் ”முதல் பார்வை” குறும்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. அருண் கிரிஷ்ணராஜா வின் இயக்கத்திலும் நடிப்பிலும் தயாராகிவரும் இக்குறும்படத்தின் முன்னோட்ட காட்சி வெளிவந்துள்ளது.   அருண், கீர்த்தனா, நிவேதா, சரண்ஜா, அருண்பிரசாத், பிரசாத், நிவேதன் ஆகியோரின் நடிப்பிலும், அருண் கிரிஷ்ணராஜா வின் இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புடன், அருண்பிரசாத் மற்றும் பிரசாத் ன் ஒளிப்பதிவிலும் Javed Reax ன் இசையிலும் மனங்கவரும் காதல் காவியமாக தயாராகிவருகிறது ”முதல் பார்வை” குறும்படம். எம்மவர் படைப்புகளை உலகமெங்கும் பரப்பிவரும் DREAM MEDIA WORKS ன் சொந்த தயாரிப்பான இந்த ”முதல் பார்வை” குறும்படம்…

Question Time பகுதியில் தமிழ் மொழியின் பெருமை

இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகை ஒன்றில் Question Time பகுதியில் கேட்கப்பட்ட கேள்வியோன்ரின் மூலமாக எமது தாய்மொழியான தமிழ் மொழியின் பெருமையும் தொன்மையும் வெளிக்கொணரப்பட்டுள்ளது. தமிழர்களாகிய நாம் தமிழையும் தமிழின் பெருமைகளையும் மறந்தாலும் சகோதர மொழியினர் தமிழை பெருமையாகவே எண்ணுகின்றார்கள். இதற்கு ஒரு சான்றுதான் இந்த தகவல். இது ஒரு சிறிய சான்றுதான் இதைவிட பல பெரிய சான்றுகள் உள்ளன. அவ்வாறான சான்றுகளை சிலர் திட்டமிட்டு அளித்து வருவதும் குறிப்பிடப்படத்தக்கது, எமது மொழியை தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் தமிழை மறக்காமலும் எமது…

ராஜ்பவனின் ”அன்று ஒரு நாள் அவளுடன்” விரைவில்

இளம் கலைஞன் ராஜ்பவனின் ”அன்று ஒரு நாள் அவளுடன்” காணொளி பாடல் விரைவில் வெளிவரவிருக்கிறது.
வெர்னன் ஜி சேகரம் இசையில் ராஜ்பவனின் குரலில் பல பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமானவை. அந்த வரிசையில் இந்த ”அன்று ஒரு நாள் அவளுடன்” பாடலும் இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
 ”அன்று ஒரு நாள் அவளுடன்” பாடல் குழுவுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி: http://www.ilayavalam.com/

ஐரோப்பா ரீதியிலனா துடுப்பெடுத்தாட்ட சுற்றுப்போட்டி 2012

தமிழர் துடுப்பெடுத்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் நல்லூர் ஸ்தான் நடாத்தும் ஐரோப்பா ரீதியிலனா துடுப்பெடுத்தாட்ட சுற்றுப்போட்டி 2012 அணிக்கு 5 பந்துப்பரிமற்றங்களுடன் 7 பேர் கொண்ட துடுப்பெடுத்தாட்ட போட்டியாக வின்சென்னேஷ் (Vincennes) மைதானத்தில் 18 -19 .08 .2012 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் நடைபெறவிருக்கிறது. நன்றி: குணா ஆறுமுகராசா

வன்னியில் ”கடன்காரன்” திரைப்பட தொடக்கவிழா

வன்னி சினிமா கிரியேஷன் முதன் முதல் தயாரிக்கும் ”கடன்காரன்” திரைப்படத்தின் தொடக்கவிழா 05.08.2012 அன்று வவுனியா தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

 

இயக்குனர் சிவகாந்தனின் இயக்கத்தில் வித்தியாசமான தலைப்பை கொண்ட ”கடன்காரன்” திரைபடத்திற்கு இசைஇளவரசன் கந்தப்பு ஜெயந்தன்  இசை அமைக்கிறார். வன்னி மண்ணிலிருந்து தயாராகும் இத்திரைப்படத்தில் கதிர், திவ்யா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

”கடன்காரன்” திரைப்பட குழுவிற்கு தமிழிதழ் இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஈழத்து கவிஞனின் முதல் தென்னிந்திய திரைப்பட பாடல்

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்து நடிக்கும் தென்னிந்திய தமிழ் திரைப்படமான ”நான்” திரைப்படத்தில் சில ஈழத்தமிழ் கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு பல போட்டிகளின் மத்தியிலே திறமைக்கு கிடைத்த வாய்ப்பே ஆகும்.   அவ்வாறு விஜய் ஆண்டனி அவர்களின் இசைக்கு பாடல் எழுதிய பல ஆயிரம் போட்டியாளர்களின் மத்தியில் ஈழத்து கலைஞனான கவிஞர் அஸ்மின் அவர்கள் தெரிவு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் கவிஞர் அஸ்மின் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்த பாடலுட்பட ”நான்” திரைப்பட பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.     ”தப்பு எல்லாம் தப்பே இல்லை…” என…

என் உயிரே என்னைவிட்டு பிரியாதே” பாடல் முன்னோட்டம்.

ஐரோப்பிய மண்ணில் பிரபல்யமான நடனக்குழுக்களில் ஒன்றான ஈழம் பாய்ஸ் (Eelam Boys) தயாரிப்பில் பிரப ல் பரதநாட்டிய மற்றும் மேலைத்தேய நடனக் கலைஞர் முரளி பாலசுப்பிரமணியம்(ஈழம் பாய்ஸ் முரளி) அவர்களின் ஒளிப்பதிவு, ஒளிக்கலவை, இயக்கத்தில் லொரேனா மற்றும் சதீஷ்-ன் ஒளிப்பதிவிலும், முரளி, தேனு, ரிஷி, ஹரிஷ், வைஷ்ணன்,  ஜொனார்தேன் ஆகியோரின் நடிப்பிலும்  வெளிவரவிருக்கும் ”என் உயிரே என்னைவிட்டு பிரியாதே” காணொளி பாடலுக்கான முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

 

நடனத்தின் மூலமாக பிரபல்யமான ஈழம் பாய்ஸ் தயாரிக்கும் பாடல் என்பதால் இப்பாடலுக்கு இளையவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.