ஐக்கியராச்சிய இளைஞர்களின் புதியபடைப்பு ”ராச்சசி” இசைக்காணொளி.

  ஐக்கியராச்சிய நம்மவர் இளைஞர்களின் புதியபடைப்பு ”ராச்சசி” இசைக்காணொளி. GJ Arts, Stylez Unit மற்றும் Harmonic Recordz இணைந்து தயாரித்த இக்காணொளி இளைஞர்களுக்கு ஒரு பாடத்தையும் புகட்டுவதாக அமைந்துள்ளது. தலைப்புக்கு ஏற்றால் போல கதாநாயகியை அழகான ”ராச்சசி” ஆக சித்தரித்துள்ளார் இயக்குனர் டீஜே(Teejay)- பாடல், கதை, திரைக்கதை, இயக்கத்துடன் நின்றுவிடாது நடிப்பிலும் பிரகாசிக்கிறார். சொல்லிசையில் த மைஸ்ட்ரோ(Tha Mystro) பாடலுக்கு மெருகேற்றுகிறார். Hemz Production இசையில் Black காளை , ஜூலியன் F மற்றும் கஜி அவர்களின் ஒளிப்பதிவில்Black காளை…

பூவே என்னிடம் வா – பாடல்

எமது இளம் கலைஞர்களின் பூவே என்னிடம்வா…என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இளம்கவித்தேன்றல் சானியா மற்றும் வச்சனின் கவிவரிகளுக்கு தர்ஸ் மற்றும் சாம் ன் இசையில் பாடலை பாடியுள்ளார் சிந்து.Y . Han-y Records தயாரித்துள்ள இந்த பாடல் இளையவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலின் கவிவரிகளும் பாடலை பாடிய சிந்து.Y அவர்களின் குரல் அசைவுகளும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளன. இசைக்கொர்வையில் இன்னும் கவனம் செலுத்தவேண்டிய தேவை உள்ளதை உணரமுடிகிறது. இருப்பினும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடலாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் இளையவர்களே……

வாழும் வரை காணொளி பாடல் – அவதாரம்

  அவதாரம் தயாரிப்பில் வாழும் வரை காணொளி பாடல். அவதாரம் குழுமம் தயாரிப்பில் மு.ராஜலிங்கம் அவர்களின் கவிவரிகளுக்கு M.R .Raheis ன் இசையில் தென்னிந்திய பாடகர்கள் விஜய் யேசுதாஸ், சாதனா சர்க்கம் ஆகியோரின் குரலசைவில் உருவான வாழும் வரை பாடல், டெசுபனின் ஒளிப்பதிவு, ஒளிக்கலவை, இயக்கத்தில் தர்சன் ஷங்கர் மற்றும் அர்ச்சனா அர்சு கிரீஸ் நடிப்பில் வெளிவந்துள்ளது. இப்பாடலுக்கான ஒப்பனை மற்றும் ஆடைஅலங்காரத்தை ரஜிதாவும் ஒளிப்பதிவு உதவி மற்றும் உதவி இயக்கத்தை பிரசன்னாவும் கையாண்டுள்ளனர். நடன இயக்கத்தை…

Adaxial Studio தயாரிப்பில் ”பெண்ணே..” (Penne -1980s style) பாடல்

  Adaxial Studio தயாரிப்பில் ”பெண்ணே..” (Penne -1980s style) பாடல் வெளியாகியுள்ளது. ”பெண்ணே என் காதல் மூச்சை தொடுவாயா…???” என்று ஆரம்பிக்கும் இப்பாடலை 1980 களின் தென்னிந்திய திரைப்படபாடல்களின் சாயலில் இசையமைத்துள்ளார் வெர்னன் G சேகரம். பாடலுக்கான கவிவரிகளை தமிழ் மணம் மாறாது வடித்துள்ளார் கவியாழன். பாடகர்கள் ஆனந்த் Vs மற்றும் டில்ஷா ரிஷி  ஆகியோரின் குரலில் பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் மெல்லிசையாய் அமைந்துள்ளது. ஐரோப்பிய மண்ணில் பல சிறந்த பாடல்களை தயாரித்து வெளியிட்டு பிரபல்யமான Adaxial Studio நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்தமையாலும், வெர்னன் G சேகரம் அவர்களின் இசைப்பயணத்தின் புது முயற்சியாக…

POPPIN’ BOTTLES LANGMIX சொல்லிசை(Rap) பாடல்

சுவிட்சர்லாந்து இளைஞர்களின் POPPIN’ BOTTLES LANGMIX சொல்லிசை(Rap) பாடல் மூன்று மாறுபட்ட மொழிகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது.Huzltime வெளியிட்டுள்ள இந்தப்பாடலைஅஜித் கணேசலிங்கம் (Huzltime) தயாரித்துள்ளார். அஜித் ஏற்கனவே பால மெல்லிசை பாடல்களை வெளியிட்டுள்ளார். ஆங்கில மெல்லிசையில் புலமை வாய்ந்த இவர் இந்த பாடலில் ஜேர்மன் மற்றும் தமிழையும் உள்ளடக்கியுள்ளார். இனிவரும் காலங்களில் இவர்களை போன்றவர்கள் தங்களின் பாடல்களில் நாகரிகமான வார்த்தைகளை உபயோகித்தால் அனைவராலும் விரும்பப்படும் என்பது எமது கருத்து.

”கடவுளின் குழந்தைகள்” (God’s Child)

இளம் கலைஞன் ராஜ்பவனின் ”கடவுளின் குழந்தைகள்” (God’s Child) பாடல் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அநாதை சிறார்களின் சமாதான வாழ்வினை மையப்படுத்தி படைக்கப்பட்ட இப்பாடல் பெரும் வரவேற்ப்பை பெரும் என்பதில் ஐயமில்லை. வெர்னன் ஜி சேகரம் இசையமைத்து இளம்கவித்தேன்றல் சானியா வின் வரிகளுடன் ராஜ்பவன் பாடி வெளிவந்துள்ளது. இவர்களுடன் ஒளிப்பதிவினை ராஜீவ் ஒளிக்கலவையை அன்டன் R ஆகியோரும் திறம்பட செய்திருக்கின்றனர்… – தமிழ்இதழ் – Artist – Rajbavan www.facebook.com/r4jbavan Music – Vernon G Segaram…

எங்கோ-பிறந்தவளே-பாடலுக்கு-யாழ்ப்பாண-கலைஞர்கள்-வீடியோ-இணைப்பு

 

இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசை அமைத்து பாடி பிரபல்யமான எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்ள வீடியோ வடிவம் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசை அமைத்து பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிய மிக பிரபல்யம் அடைந்த எங்கோ பிறந்தவளே என்றபாடலுக்கு முதன் முதல் வீடியோ வடிவம் கொடுத்துள்ளனர் யாழ்ப்பாண கலைஞர்கள்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் இப்பாடலை காட்சி படுத்தி உள்ளார்கள் யாழ்ப்பாண கலைஞர்கள். இப்பாடலை தயாரித்துள்ளார் கோபி அவர்கள்..