யாழ். ராஜா 2 திரையரங்கில் ‘அறமுற்றுகை’

மயன் காந்தன், மதிசுதா, யோசித்தன், சிவராஜ் மற்றும் பல கலைஞர்களின் பங்களிப்போடு ‘அறமுற்றுகை’ குறுந்திரைப்படம், எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். ராஜா 2 திரையரங்கில் திரையிடப்படுகிறது.

Master screen jaffna வின் தயாரிப்பில் வெளியாகும் இத்திரைப்படத்திற்கு அனைவரது ஆதரவையும் வேண்டி நிற்கிறார்கள் கலைஞர்கள்.

நம் கலைஞர்களின் இப்புதிய முயற்சி வெற்றி பெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.

மே தினத்தில் ‘குருதிப் பூக்கள்’

ஈழத்து காதலை மையப்படுத்தி உருவாகி வரும் ‘குருதிப் பூக்கள்’ காணொளிப்பாடல், எதிர்வரும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் திகதியன்று வெளியாகவுள்ளது.

கதிரின் இயக்கம் மற்றும் பலரின் ஒத்துழைப்புடன் உருவாகிவரும் இந்த புதிய படைப்பு வெற்றி பெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.

 

 

வெகு விரைவில் ‘யார் குற்றவாளி?’

ஜீவஸ்வரனின் இயக்கத்தில் வெகு விரைவில் வெளியாகவிருக்கிறது, ‘யார் குற்றவாளி?’ குறுந்திரைப்படம்.
 
படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள குழுவினர், அனைவரது ஆதரவையும் எதிர்ப்பார்த்துள்ளார்கள்.
 
அவர்களின் இந்த புதிய முயற்சிக்கு தமிழிதழின் வாழ்த்துக்கள்.

வெகு விரைவில் ‘தூரிகைப் பெண்ணே’

செல்வா முகுந்தனின் இயக்கத்தில், சுதர்சனின் இசை மற்றும் மயூரா சங்கர், லக்ஸ் ஆகியோரின் இனிமையான குரல்களில் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து படைக்கப் போகிறது ‘தூரிகைப் பெண்ணே’ காணொளிப்பாடல்.

நடிப்பு – ஜெய்வி, சாகானா மற்றும் இளங்கோ, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு – ராஜபேட்சிறில்.

இளைஞர்களின் இந்த கூட்டு முயற்சி வெற்றிபெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.

மிரட்டுகிறாள் ‘பஞ்சமி’

கிஷோரின் இயக்கத்தில்சக்தி production வழங்கும் ‘பஞ்சமி’ குறுந்திரைப்படம் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது.

படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு மிரட்டியுள்ளார்கள் கிஷோர் மற்றும் குழுவினர்.
அதுவே, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

இந்த புதிய முயற்சி வெற்றி பெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.

ஹனி நயாகராவின் பாணியில் “மறுவார்த்தை பேசாதே…”

Re arranged , Sung Mixed And Mastered by A.Honey Niagara Rap & Rap Lyrics By Mr MC Video & Editing by Nimalan   வெளியான நாளிலிருந்து இன்று வரை அனைவர் வாயையும் அசைப்போட வைத்துக்கொண்டிருக்கும் பாடல் “மறுவார்த்தை பேசாதே…” ‘என்னை நோக்கிப் பாயும்தோட்டா’ திரைப்படத்தில் இடம்பெறும் இந்த பாடலை, ரப் இசையுடன் கோர்த்து வித்தியாசமாக தந்துள்ளார்கள் ஹனி நயாகரா குழுவினர். ஒரிஜினல் வேஷனிலிருந்து பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை…

‘அவள் ஒரு தொடர்கதை’ முதல் போஸ்டர்

சிவ பிரகாஷ் மற்றும் குழுவினர் வழங்கும் ‘அவள் ஒரு தொடர்கதை’ குறுந்திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்ப்பாக்கப்படும் இந்த குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு தினத்தை வெகு விரைவிலேயே உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

மலேசிய இளைஞர்களின் இந்த முயற்சி வெற்றி பெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.

பிரசன்னாவின் ‘உறவுகள் தொடர்கதை’ ஏப். 14இல்

பிரசன்னாவின் ‘உறவுகள் தொடர்கதை’ குறுந்திரைப்படம், எதிர்வரும் 14 ஆம் திகதி புத்தாண்டு தினத்தன்று வெளியாகவுள்ளது.

இசை – மரியா ஜெரால்ட், செம்மையாக்கம் – அரவிந்த் ஜெகன், நடிப்பு – விக்கேஷ்.

உண்மை சம்பவத்தை கருப்பொருளாகக் கொண்டு வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்திற்கு தமிழிதழின் வாழ்த்துக்கள்.

தமிழ் புத்தாண்டு தினத்தில் ‘காதல் பொய்தானா?’

Music – Mohamed Shameel J Rap – S-KAR Singer – Shameel J Lyrics – S-KAR and Shameel Album – Sollisai Illavarasan Cast – Saran Ks / Santia / S-kar Concept & Direction : Suresh.K Assistants Directors – Kobithas / Kirushanthan Cinematography / Editing / Color grading – Dr.BENDS Assistants Cinematography : Suku / Naj ‘காதல்…

‘Why Da’ காணொளிப் பாடல் டீஸர் வெளியானது

 

HK NETWORK வழங்கும் ‘Why Da’ காணொளிப் பாடலின் டீஸர்  வெளியாகியுள்ளது.

வதனியின் இயக்கத்தில் புனித ராஜாவின் எழுத்து மற்றும் இசையமைப்பில் வெகு விரைவில் வெளியாகவிருக்கும் இந்த காணொளிப்பாடலுக்கு ஸாலி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நிவாஷன், ரூபினி கிருஷ்ணன், ஷபி உட்பட பலர் நடித்துள்ளனர்.

டீஸர் மூலம் பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்கள் ‘Why Da’  குழுவினர். அவர்களின் முயற்சி வெற்றி பெற தமிழிதழின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

 

 

யோக விதுர்ஷனின் இயக்கத்தில் ‘தொல்வினை’

யோக விதுர்ஷனின் இயக்கத்தில் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது ‘தொல்வினை’.

செம்மையாக்கம் அஜன், ஒளிப்பதிவு கஜனந்த சர்மா .

தினுஷன், மவாஸ், அனுஷ கான், நிரஞ்சன், பவன்தா, ரவி என பலரும் நடித்திருக்கும் இந்த படைப்பு, வெகு விரைவிலேய உங்களை மகிழ்விக்கப்போகிறது.

‘தொல்வினை’ குழுவினரின் முயற்சி வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்