எச்சரிக்கை மணியடிக்கும் ‘கைப்பேசி’

 

Kisho Loveஇன் இயக்கம் மற்றும் Trible Beats இசையில் வெளியாகியிருக்கும் ஒரு நிமிட குறுந்திரைப்படம் ‘கைப்பேசி’.

பெரிதான காட்சிகள் இல்லை; வசனங்கள் இல்லை. அதற்கு பதிலாக நகைச்சுவை பாணியில் அமைந்த இசையின் மூலம் அவசரமும் அவசியமுமான கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள், கலைஞர்கள்.

‍மொத்தத்தில் ‘கைப்பேசி’, இளைய தலைமுறைக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.

 

காதல் இசை எழுப்பும் ‘HEART BEAT’

MG.ASRAFஇன் தயாரிப்பில் THOUFEEK SMART தந்திருக்கும் குறுந்திரைப்படம் ‘HEART BEAT’. முற்பாதியில் கதையும் பிற்பாதியில் கதை சொல்லும் பாடலும் என கலந்துகட்டி ரசிக்கும் படைப்பாக தந்துள்ளார்கள், ‘HEART BEAT’ திரைப்படக் குழுவினர்.\ தெருவில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது கதாநாயகனுக்கு பெண் குழந்தையொன்று அறிமுகமாவதோடு ஆரம்பிக்கிறது, படம். நாட்கள் உருண்டோட தன் தங்கையின் பிரதியாக நினைத்து குழந்தையுடன் நெருக்கம் காட்டுகிறான், கதாநாயகன். ஆனால், அந்தக் குழந்தையின் தாய் அதை விரும்பவில்லை. இந்நிலையில், திடீரென நெஞ்சை பிடித்தபடி கீழே விழும்…

உறவுகளை தேடும் ‘எங்கே?’ காணொளிப்பாடல்

ஈழத்தில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு சமர்ப்பணமாக வெளியாகியுள்ளது, ‘எங்கே?’ காணொளிப்பாடல். பேரினவாதத்தின் போர் அனைத்தையும் பறிகொண்டு விட்டபோதும், தொடர்ந்தும் பழிவாங்கப்படுகிறது நம் தமிழ் இனம். இப்போது அவர்களின் மிக முக்கிய கோரிக்கை, காணாமல் போன தம் உறவுகளை மீட்டுத் தாருங்கள் என்பது தான். குறைந்தபட்சம், அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா என்பதையெனும் அறியத்தாருங்கள் என கோருகிறார்கள். கடந்து விட்ட இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ கதவுகளை தட்டியாகிவிட்டது. பலர், கால்களிலும் விழுந்தாகிவிட்டது. உண்ணும் உணவைத்…

‘THE TRIP TO THE BUNKER’ யாரும் போக விரும்பாத பயணம்

உக்கிர போர், நம்மிடமிருந்து அனைத்தையும் நிரந்தரமாக பறித்து சென்று விட்டது. உயிர், உடமை, நிம்மதி, எதிர்காலம், சந்தோஷம்  இப்படி நாம் இழந்தவை எத்தனை எத்தனையோ. ஆண்டுகள் பல கடந்துவிட்டது; இதில் எதுவும் திரும்பி கிடைத்துவிடப் போவதில்லை, அது சாத்தியமும் இல்லை. ஆனாலும்,  மனம் புழுவாய் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்த தவிப்பை, ஏக்கத்தை, போரின் கோரத்தை வெளிச்சம்போட்டு காட்டும் ஆவணப் படமாக வெளியாகியுள்ளது, ‘THE TRIP TO THE BUNKER’ (பதுங்கு குழிக்கான பயணம்). தமிழ் உப தலைப்புடன் ஆங்கிலத்தில்…

புவிகரனின் ‘தேடல் 2050’

  பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருந்த புவிகரனின் ‘தேடல் 2050’ குறுந்திரைப்படம் உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ளது. உலகம் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நாளுக்கு நாள் மனிதன், இயற்கையின் வரத்தை தொலைத்துக் கொண்டே இருக்கிறான். சுத்தமான காற்றைத் தொடர்ந்து இப்போது குடிநீரை நிரந்தரமாக தொலைத்து விடப்போராடிக் கொண்டிருக்கிறான். இதே நிலை நீடித்தால் நாளை நம் சந்ததியின் நிலை? இதை கருப்பொருளாகக் கொண்டு உருவாகியிருக்கும் குறுந்திரைப்படம் தான், ‘தேடல் 2050’. ராஜன் செல்வாவின் கதை, சற்றே வேடிக்கையாகத் தெரிந்தாலும், இது…

எச்சரிக்கிறது, PARANOIA

இயக்கம் – நிரஞ்சன் நடிப்பு – அஷ்வின் ஜத் இசை – ராகுலன் ஒளிப்பதிவு – கெவின் நவிஸ் செம்மையாக்கம் – செல்வா மன அழுத்தம், இந்த நவீன யுகத்தில் மனிதனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் மிகக் கொடிய நோய். இது நமக்கு இருக்கிறதா? இல்லையா? என்று புரிந்து கொள்ளவதற்கு முன்னமே நம்மை அது பாதி கொன்றுவிட்டிருக்கும். இதனை கருப்பொருளாகக் கொண்டு நிரஞ்சனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறுந்திரைப்படம் தான், PARANOIA. படத்தில் மிகப் பெரிதாக கதையொன்றும் இல்லை. பெரிய பெரிய…

நிலையாமையை புரிந்துகொள்ளச் சொல்லும் ‘குருதிப்பூக்கள்’

  மாற்றம் என்ற சொல்லைத் தவிர இந்த உலகத்தில் இருக்கும் அனைத்தும் மாறக் கூடியது தான். ஒன்றை விடுத்து மற்றொன்று எப்போதும் சிறப்பானதாகாது என்பதை போரின் வலிகளுடன் கூறுகிறது ‘குருதிப் பூக்கள்’ காணொளிப்பாடல். கதிரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடலுக்கு Cv laksh வரிகளைத் தந்துள்ளார். Freestyle இசையில் தங்கள் இசைத் திறமையை நம் கலைஞர்கள் மிகச் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்கள். போரை, அதனால் ஏற்பட்ட இழப்பை அத்தனை இலகுவில் காட்சிப்படுத்திவிட முடியாது. இது நம் உணர்வு சம்பந்தப்பட்ட…

‘இவன் இராவணன்’, சந்தேகத்திற்கு சாட்டையடி

இன்றைய காலத்தில் காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமோ எல்லாமே அவசரத்தில் தான் நடக்கிறது. இதில், யார் யாரை எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறார்களோ தெரியாது. ஆனால், திருமணம் மட்டும் ஊரார் பார்க்க பிரமாண்டமாய் நடந்து முடிந்துவிடும். இனியென்ன சில மாதங்களோ, வருடங்களோ இருவரும் நீதிமன்ற வாசலில் காத்திருப்பார்கள், விவாகரத்திற்காக. இதை நிகழ்காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுடன் சற்றும் வித்தியாசமான கோணத்தில் காட்சியப்படுத்தியிருக்கிறது ‘இவன் இராவணன்’ குறுந்திரைப்படம். Vigithan Sokkaவின் இயக்கத்தில் Sathapranavan, Raam Indian, thayalan, Mrs…

‘காரா’, மென்மையான காதலுக்கான ஒரு பயணம்

Written & Directed by Ajith Music : Sumesh Kumar DOP : Kamalesh Assistant Directors : Kadeshwaran, Anand kumar, Ravichandran, Arjun, Harsha, Karthick, Vincent, Vasan, Singers : Karthik Baskar Editing : Ajith Starring : Pooja, Kathir, Vishnu priya, Jeevitha Rajendran, Viswesh Murugan, Naveen Roshan, Karthick Gonsalvez, Saravanan, Seeshma Dinoop, Rehana Khan, Anand kumar, Gowtham, Dhivya Sreenivasan,…

த்ரில் காதல் கதையை கூறும் ‘நொடிகள்’

மனதை மயக்கக் கூடிய ஒரு பூங்காவில் தன் மனத்திற்கினிய காதலியுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான், இளைஞன் ஒருவன். ஆனால், அந்த உரையாடல் என்னவோ மகிழ்ச்சி தரும்வகையில் இல்லை. அவள் ஒரு பக்கத்தில் கண்ணீர் வடிக்க, அவனோ தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறான், அவளின் பதிலை எதிர்பார்த்து. ஆனால், அவளிடம் மெளனம் மட்டுமே பதிலாக வருகிறது. என்ன நேர்ந்தது இவர்களுக்குள்? என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது, ‘நிமிடங்கள்’ குறுந்திரைப்படம். காதல் என்ற சொல் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பில்லாத அன்பையும், அதனால் ஏற்படும் வலியையும் பறைசாற்றும் இந்த…

‘வெள்ளைப் பூவே’ காணொளிப்பாடல்

ADK SRIRASCOL, TEEJAY ஆகியோரின் கூட்டு முயற்சியில் வெளியாகியிருக்கிறது, ‘வெள்ளைப் பூவே’ காணொளிப்பாடல். பாடலின் மிகப்பெரிய பலம், ரப் இசை. ஆரம்பத்தில் மென்மையாக பயணிக்கும் பாடல் இதனாலேயே வேகமெடுக்கிறது. பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து ரசிக்கவைக்கிறது. அலட்டல் இல்லாத காட்சியமைப்பு, பின்னணி இசை, பாடகர்கள் என அனைத்தும் நிறைவாகவே உள்ளது. அனைவரும் தங்கள் பங்களிப்பை நிறைவாகவே தந்துள்ளார்கள். காதல் ரசம் சொட்டும் வரிகள் இனிமை. ஆனால், அந்த இனிமையை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளமுடியாதபடி உச்சரிப்புப் பிழை தடுத்துவிடுகிறது. இதை…